ஹாக்கி உலகக் கோப்பை மலேசியா மீண்டும் அர்ஜெண்டினாவிடம் தோல்வி!

- Muthu Kumar
- 06 Feb, 2025
கோலாலம்பூர், பிப்.6-
2025 உலகக் கோப்பையில் குரூப் பி யின் இரண்டாவது ஆட்டத்தில் அர்ஜெண்டினாவிடம் 2-5 என்ற கணக்கில் தோல்வி கண்டு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் தேசிய ஆடவர் ஹாக்கி அணியின் திட்டம் நிறைவேறாமல் போனது.
குரோஷியாவின் போரெக் நகரில் உள்ள ஜாட்டிகா விளையாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 12ஆவது நிமிடத்தில் ஷமி இர்பான் சுஹைமியின் கோல் மூலம் ரோட்ஜானிசம் மாட் ராட்ஸி தலைமையிலான மலேசியா அணி சிறப்பாகத் தொடங்கியது.
எவ்வாறாயினும், 17ஆவது, 19ஆவது நிமிடங்களில் முறையே கேஸ்டன் ரோட்ரிக்ஸ், ஃபகுண்டோ ஜி நவரோ ஆகியோரின் கோல்கள் மூலம் அர்ஜெண்டினா இரண்டு முறை கோல் அடிக்க, முதல் பாதியில் 2-1 என முன்னிலை பெற்றது.ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் பெனால்டி கார்னர், ஸ்ட்ரோக் பெனால்டி மூலம் முறையே அல்பிரடோ சோசா, அகஸ்டின் செபாலோஸ் ஆகியோர் இரண்டு கோல்களை அடித்தனர். இந்த தோல்வியால் மலேசியா புள்ளிகள் ஏதுமின்றி பி பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்தது. அர்ஜெண்டினா மூன்று புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது.
நேற்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்த ரோட்ஜானிசம், நேற்று முன் தினத்தை விட தனது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக ஒப்புக்கொண்டார். இந்த போட்டியில் அர்ஜெண்டினாவுடன் போட்டியிட முடியும். ஆனால் வீரர்கள் செய்த தவறினால் அர்ஜெண்டினா அணி கோல் அடிக்க வழிவகுத்தது என்று மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு பகிர்ந்துள்ள ஆடியோ மூலம் கூறினார்.
முந்தைய இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் மலேசியாவின் காலிறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கடினமாகக் காணப்பட்டாலும், மலேசியா ஈரானுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் தனது வீரர்கள் எழுச்சி பெறுவார்கள் என்று அவர் நம்புகிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *