சூரியன் உதித்து சில மாதங்கள் மறையாமல் இருக்கும் சில நாடுகள்...

top-news
FREE WEBSITE AD


சூரியன் என்பது மனித வாழ்விற்கு முக்கியமானது என்றாலும் வருடங்களில் பல மாதங்களாக சூரியன் உதித்தபடி இருக்கும் நாடுகளைப் பற்றியும்,  சூரியன் மறையாத இருக்கும் நாடுகளைப் பற்றியும் இந்த செய்திகளில் காண்போம்...
                            நார்வே
நார்வேயில் இருக்கக்கூடிய "லேண்ட் ஆப் மிட்நைட் சன்" என்று அழைக்கப்படும் ஒரு இடம் தான் "ஹேமர்பெஸ்ட்". நார்வே நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் இந்த "ஹேமர் பெஸ்ட்" என்ற இடத்தில் 8000 மக்கள் வாழ்கிறார்கள்.இந்த ஹேமர்பெஸ்ட் இடத்தை யுனோஸ்கோ உலக பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது. இங்கு 12 :43 மணிக்கு சூரியன் மறைந்துவிடும் மறைந்த 40 நிமிடத்தில் மீண்டும்  சூரியன் உதித்து விடும். இது மட்டும் நார்வே  சிறப்பு கிடையாது. நார்வேயில் நிறைய இடங்களில் இது போல் காணப்படுகிறது. நார்வே நாடு ஆர்க்டிக் பகுதியில் வருவதால் சூரியன் மறையாமல் இருக்கும் செயல் நடைபெற்று வருகிறது. மே முதல் ஜூன் மாதம் வரை 70 நாட்கள் மட்டும் சூரியன் மறையவே மறையாது.
கடிகாரத்தை பார்த்தால் மட்டுமே தெரியும் இரவு பகல் எது என்று..

                      ஐஸ்லேண்ட்
ஐஸ்லேண்ட் என்பது சூரியன் மறையாத நாடு  மட்டுமல்ல, இங்கு கொசுக்களே கிடையாது. கொசுக்கள் இல்லாத ஒரு நாடு என்றால் அது ஐஸ்லேண்ட்... பேரில் ஐஸ் இருப்பதினால் என்னமோ இங்கே கொசுக்கள் இல்லாமல் ஐஸ் மட்டுமே இருக்கிறது. சம்மர் சீசன் என்றால் எப்பொழுது சூரியன் மறையும் என்று எதிர்பார்க்கலாம் பின் சூரியன் மறைந்ததும் மனதிற்கும், உடலுக்கும் இதமாக இருக்கும். ஆனால் ஐஸ்லாண்டில் சம்மர் சீசனிலும் 24 மணி நேரமும் சூரியன் மறையாமல் இருக்கும். அருகில் கிரீன்சிஹைலேண்ட் என்னும் இடத்திலும் சூரியன் மறையாது..

                       நுனாவுட்   -  கனடா
கனடா நாட்டின் வடக்கே 3000 மக்கள் மட்டுமே வாழும் ஒரு இடத்தின் பெயர் தான் நுணாவட். விண்டர் சமயத்தில் 30 நாட்களுக்கும் சூரியன் உதிக்கவே உதிக்காது 30 நாட்களும் இருட்டு மட்டும் தான்.. அதற்கு அப்படியே மாறாக இரண்டு மாத சம்மர் காலத்தில் சூரியன் மறையவே மறையாமல் இருட்டை பழிவாங்குவது போல் இருக்கும்..

                    யுகோன்     -   கனடா

கனடாவின் மற்றொரு இடமான யுகான் என்னும் இடம் வருடத்தில் அதிக பனி மூடும் இடங்களில் இரண்டாவது இடமாக இது விளங்குகிறது. இந்த இடத்தில் சுமார் 50 நாட்களுக்கு சூரியன் மறையவே மறையாதாம். என்னதான் 24 மணி நேரமும் சூரியன் உதித்து இருந்தாலும் அந்த இடத்தில் வெப்பநிலை மிகவும் குறைவு தான். இங்கே சம்மர் நேரத்தில் சூரிய ஒளியுடன் வானை பார்க்கும் பொழுது அற்புதமாக இருக்கும். ஏனென்றால் இயற்கையை மாசு படுத்தாத விஷயத்தினால் இவ்வாறு தெரிகிறதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த  காலகட்டத்தில் இங்கு நிறைய பூக்கள் பூக்குமாம். வெவ்வேறு இன பறவைகள் வந்து போகுமாம். இந்த சூரியன் மறையாத 50 நாட்களையும் மக்கள் வருடம் தோறும் மிகவும் எதிர்பார்ப்பார்களாம்.

                    பேரோ    -  அலாஸ்கா

அலாஸ்கா நாட்டிலுள்ள பேரோ எனும் இடத்தில் 4000 மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். ஏனென்றால் மிகவும் குளிரான இந்த இடத்தில் வானிலை மிகவும் மோசமாக இருப்பதே இதற்கு காரணமாக கூறுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடங்களில் இந்த இடமும் ஒன்று.  மே முதல் ஜூன் வரை 24 மணி நேரமும் சூரியன் உதித்த படியே இருக்குமாம்.இங்கு வெப்பநிலை 10 முதல் 15 டிகிரி செல்சியஸ் மட்டுமே. நவம்பர் முதல் ஜனவரி வரை இந்த இடத்தில் சூரியன் உதிக்கவே உதிக்காதாம். ஆகவே இந்த காலகட்டத்தை மக்கள் "போலார் நைட்" என்று அழைக்கின்றார்கள். சமீபத்தில் நடந்த "போலார்நைட்டில்" சுமார் 66 நாட்களுக்குப் பின் உதித்த சூரியன் ஒன்று ஒன்பது மணிக்கு உதித்து உடனே இரண்டு ஒன்பது மணிக்கு மறைந்து விட்டதாம்..சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே சூரியன் வந்து சென்றதாம்.

                      க்ருனா    -  ஸ்வீடன்

ஸ்வீடன்  நாட்டில் உள்ள க்ருனா என்ற இடத்தில் 19000 மக்கள் மட்டுமே வாழ்ந்து வாழ்கின்றனர். க்ருனவில் ஒன்பது பத்து மணிக்கு சூரியன் உதித்து இரண்டரை மணிக்கு மறையும். இந்த இடத்தில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 100 நாட்களுக்கு சூரியன் 24 மணி நேரமும் மறையவே மறையாதாம். இங்கு வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் என்பதால் சூரியன் உதித்தாலும் குளிராகவே க்ருனா இடம் காணப்படும்..

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *