ஆன்லைன் காதல் மோசடியில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்! - அதற்குக் காரணம் இதுதான்... - காவல்துறை விளக்கம்
- Shan Siva
- 06 Sep, 2024
கோலாலம்பூர்: தனிமை, உண்மையான அன்பைக்
கண்டுபிடிக்கும் ஆசை, எளிதில் நம்பும்
பாச வெளிப்பாடுகள் போன்றவை ஆன்லைன் காதல் மோசடிகளுக்கு பெண்கள் அடிக்கடி
பலியாவதற்கு சில காரணங்கள் என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் காதல் மோசடிகள் குறித்து
கணக்கு சொல்லியிருக்கிறது.
மலேசியாவில் 2022 முதல் இந்த
ஆண்டு ஆகஸ்ட் வரை பதிவு செய்யப்பட்ட 2,223 வழக்குகளில் 79.3 விழுக்காடு
பெண்களே காதல் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவதாக காவல்துறை புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர்
டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.
பல காரணிகள் பெண்களை காதல் மோசடிகளுக்கு ஆளாக்குகின்றன. பெண்கள் பெரும்பாலும் உணர்ச்சி ரீதியிலும் தனிப்பட்ட உறவுகளிலும் மிகவும் திறந்த மனநிலையில் கருதப்படுகிறார்கள். இது மோசடிப் பேர்வழிகளுக்கு வசதியாகிவிடுகிறது.
காதல் உறவுகளை விரும்பும் பெண்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் சைகைகளுக்கு
மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். உண்மையான அன்பைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை
கொண்ட பெண்களும் புதிரான கதைகளை நம்ப விரும்புகின்றனர். அவை உண்மையற்றதாகத் தோன்றினாலும் கூட என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையில், காதல் மோசடி
சிண்டிகேட்டுகள் ஒரு குறிப்பிட்ட வயதினரை குறிவைப்பதில்லை என்று ரம்லி கூறினார்.
யார் வேண்டுமானாலும் பலியாகலாம். 2022 ஆம் ஆண்டில், 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில், 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில், 41 முதல் 50
வயதிற்குட்பட்டவர்கள், 215 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை, 178 நபர்களுடன், 21 முதல் 30 வயது வரம்பில்
அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார்.
வழக்குகள் மற்றும் நிதி இழப்புகள் குறித்து, 2022 ஆம் ஆண்டில், 792 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், மொத்த இழப்பு RM56.2 மில்லியன்
என்றும், 2023 இல், 935 வழக்குகள் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக RM43.9 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் ரம்லி கூறினார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், 496 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் மொத்தம் RM23.3 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், வழக்குகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட அதிகமாக இருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
காதல் மோசடி குற்றங்களைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த
காவல்துறை உறுதிபூண்டுள்ளது என்று ரம்லி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *