பலருக்கும் தெரியாத உலக நூலகங்கள்!

top-news
FREE WEBSITE AD


அமைதியான சூழல் தேடி  சென்று நூலகம் நாடிச் செல்வோர் பலர் உண்டு.
அந்த அமைதி சூழ் நிலையில் கதை உலகில் மூழ்க  விரும்புவர்கள் ஏராளம்.

அத்தகைய நூலகங்களின் கட்டிட வடிவமைப்புகள் ஒவ்வொரு இடத்திற்கு மாறுபடும்.
உலகில் பலருக்கும் தெரியாத அதே நேரம் பல பேர்  விரும்பும் வித்தியாசமான 7 நூலகங்கள் பட்டியலில் உள்ளன.

ஏழாவது இடத்தில்..சிங்கப்பூரில் உள்ள பீஷான் பொது நூலகம்.
சிங்கப்பூர்


மரவீடு போன்ற அமைப்பினை பிரதிபலிக்கும் கட்டடம் இந்த நூலகம்.
எளிமையும் புதுமையும் கலந்த வடிவமைப்பு.
4000 சதுர மீட்டர் பரப்பளவில் கண்ணாடி ஜன்னல்களை கொண்ட நூலகம் விருது பல பெற்றுள்ளது.





ஆறாவது இடத்தில்..ஸ்டட்கர்ட் நகர நூலகம்:ஜெர்மனி
புதுமையான வடிவமைப்பு மற்றும் பளிச்சென்ற வெள்ளைச் சுவர்கள் என்று வித்யாசமாக காட்சியளிக்கிறது. சிலர் இதை வினோதம் என்கிறார்கள், சிலர் நூலகம் அதன் சுற்றுபுறத்துக்குப் நன்றாக இல்லை என்கின்றனர்.





5ஆம் இடத்தில்..எகிப்தில் அமைந்துள்ள பிப்லியோதிக எலெக்ஸண்டா
கிரேக்க காலத்தின் போது மாவீரர் அலெக்ஸ்செண்டரால் கட்டப்பட்ட நூலகம்.
2002ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டு
ஒரு நவீன கலைப்படைப்பாகப் பார்க்கப்படுகிறது இந்த நூலகம்.



4ஆம் இடத்தில்..தி யு டெல்ஃப்ட் நூலகம்  நெதர்லாந்து நாட்டில் உள்ள இந்த நூலகத்தைச் சுற்றி பச்சை பசுமையான புல்வெலி உள்ளது. அதற்கென தனித்துவம் வாய்ந்த ஒரு அரும்பொருளகமும் உண்டு. நூலகம் தரைக்குக் கீழ் கட்டப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம்.



3 ஆம் இடத்தில்..கெலிஃபொர்னியா பல்கலைக்கழக நூலகம்: சென் டியாகொ
வினோதமான வடிவமைப்பைக் கொண்ட இந்த நூலகம்.கையில் புத்தகங்களை ஏந்தியது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
7 மில்லியனுக்கும் மேற்பட்ட பலதரப்பட்ட நூல்கள் இங்கு வந்தால் கிடைக்கும்.
இந்தக் கட்டிடத்தின் 3ஆம் தளத்துக்குச் செல்ல  யாருக்கும் அனுமதியில்லை.
ஏன் என்ற காரணம் இதுவரை வெளியிடவே இல்லை.



2ஆம் இடத்தில்...டப்ளினில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழக நூலகம்..
பழமையான கட்டடமாக இருந்தாலும் இதன் சூழலை விரும்புவோர் பலர்.
கிட்டத்தட்ட 2 லட்சத்த்திற்கும் மேலான புத்தகங்கள் இங்கே உண்டு.
1592ஆம் ஆண்டு முதலாம் எலிசபத் அரசியார் இந்த நூலகத்தை நிறுவினார்.
இரண்டாம் எலிசபத் அரசியார் கடந்த 7 ஆண்டு  முன்பு நூலகத்தைப் பார்வையிட்டார்.



முதல் இடத்தில்..வாஷிங்டன் சியெட்டலில் உள்ள சென்ட்ரல் நூலகம்..

இந்த நூலகத்தைக் காண உலகெங்கிலும் பல இடங்களில்  இருந்து மக்கள் செல்கின்றனர்.இந்த நூலகத்தின் நவீன அமைப்பு அவர்களை ஈர்க்கிறது.
இந்தக் கட்டடத்தில் கைத் தொலைபேசி வழி சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.






ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *