குத்துச் சண்டை போட்டியில் காயமடைந்த வீரர் மரணம்!

- Muthu Kumar
- 10 Feb, 2025
குத்துச் சண்டை போட்டியில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரர் மரணமடைந்துள்ளார்.அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரரான ஜான் கூனி (வயது 28) பெல்ஃபாஸ்ட் நகரத்தில் கடந்த பிப்.1 அன்று நடைபெற்ற நாதன் ஹோவெல்ஸ் என்பவருக்கு எதிரான செல்டிக் சூப்பர் ஃபெதர்வெயிட் குத்துச் சண்டை போட்டியின் 9வது சுற்றியில் படுகாயமடைந்து தோல்வியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, பெல்ஃபாஸ்ட்டிலுள்ள ராயல் விக்டோரியா மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது தலைக்குள் ஏற்பட்ட ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்நிலையில், அவர் பிப்.8 தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கு ஏராளமான குத்துச் சண்டை மற்றும் விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, ஜான் கூனி கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பரில் குத்துச் சண்டை வீரர் லியாம் கய்னோர்க்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று செல்டிக் பட்டத்தை வென்றார்.
அதன் பின்னர் தனது கையில் ஏற்பட்ட காயத்தினால் சுமார் ஓராண்டு காலம் அவர் போட்டிகளிலிருந்து விலகியிருந்ததைத் தொடர்ந்து கடந்த 2024 அக்டோபரில் மீண்டும் போட்டியிட்டு டான்சானியா நாட்டைச் சேர்ந்த டம்பேலா மஹருசிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *