ரபிஸிக்கு வாய் சரியில்லை! – பாஸ் கட்சி கண்டனம்!

- Sangeetha K Loganathan
- 16 May, 2025
மே 16,
பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் Dato’ Seri Rafizi Ramli பாஸ் கட்சியைப் பற்றி பிரச்சாரங்களில் பேச வேண்டிய அவசியமில்லை என பாஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாங்கூர் பாங்கியில் உள்ள ஒரு பொதுமண்டபத்தில் பேசிய Dato’ Seri Rafizi Ramli பி.கே.ஆர் கட்சி உறுப்பினர்கள் துடிப்புடனும் விவேகத்துடன் இருக்க முடியாமல் போனதற்குப் பாஸ் கட்சி முக்கிய காரணம் என்றும் பாஸ் கட்சியைப் போன்ற இன மத கட்சியாக இல்லாமல் பல்லினத்துவத்தை முன்னிருத்தி பி.கே.ஆர் செயல்பட வேண்டும் என பேசியதை அடுத்து பாஸ் கட்சி Dato’ Seri Rafizi Ramliயின் கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக பாஸ் கட்சியின் BANGI மாவட்ட இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் Mohd Afif Firdaus தெரிவித்தார்.
பி.கே.ஆரில் தேர்தல் என்றால் அதை அந்த கட்சிக்குள் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும், தேவையில்லாமல் மற்ற கட்சிகளைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரசியல் நாகரீகம் இல்லாமல் கட்சித் தேர்தலைப் பொதுத் தேர்தல் என நினைத்து குழப்பத்தில் Dato’ Seri Rafizi Ramli பேசினார் என Mohd Afif Firdaus தெரிவித்தார். அந்த பிரச்சாரத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து 3 பிரச்சாரங்களில் Dato’ Seri Rafizi Ramli பாஸ் கட்சியைப் பற்றி பேசியிருப்பதாகவும் அவருக்கு வாய் சரியில்லை, அதைச் சரி செய்ய பாஸ் கட்சி தயாராக இருப்பதாக Mohd Afif Firdaus தெரிவித்தார்.
PAS mengecam kenyataan Dato’ Seri Rafizi Ramli yang mengaitkan parti itu dalam kempen pemilihan PKR. PAS menegaskan agar Rafizi tidak membabitkan parti lain dan menuduh beliau tidak menjaga tutur kata semasa berkempen.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *