பொருள்களைப் பதுக்கிய உணவக உரிமையாளருக்கு RM100,000 அபராதம்!

top-news

மே 15,

அரசு மானியத்தில் வழங்கப்படும் சமையல் பொருள்களில் கட்டுப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 38 வயது உணவக உரிமையாளருக்கு RM100,000 அபராதம் விதித்து Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2024 ஏப்ரல் 26 பிற்பகல் 3.15 மணிக்கு உணவகத்தின் பணியாளர்கள் தங்கும் விடுதியில் 1,241 கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறையினர் பறிமுதல் செய்த நிலையில் குற்றத்தை 38 வயதான உணவக உரிமையாளர் ஒப்புக்கொண்டார்.

உணவகத்தை நடத்திய 38 வயது ஆடவர் Bangladesh நாட்டைச் சேர்ந்தவர் என்றும் ஒப்பந்த முறையில் வணிகத்தில் ஈடுபட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில் அவரின் பாஸ்போர்ட் முடக்கப்படுவதாகவும் மேலதிக விசாரணைக்குப் பின்னர் அபராதத்தைச் செலுத்தும்படியும், தவறினால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் சிறையும் மேலதிக தண்டனையும் விதிக்கபடும் என Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது.

Seorang pemilik restoran warga Bangladesh didenda RM100,000 oleh Mahkamah Sesyen kerana menyimpan 1,241kg minyak masak bersubsidi secara haram. Minyak dirampas pada 26 April dan pasport suspek telah disekat untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *