34 கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய ஆடவர் சுட்டுக்கொலை!

top-news

மே 15,

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் இன்று அதிகாலை பினாங்கில் உள்ள Bayan Lepas சாலையில் சுட்டுக் கொன்றனர். 35 வயதுள்ள சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது சந்தேகநபர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததாகப் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.

இச்சம்பவம் அதிகாலை 4.03 மணிக்கு நிகழ்ந்ததாகவும் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறைக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் Datuk Hamzah Ahmad தெரிவித்தார். சந்தேகநபர் பயன்படுத்திய BMW வாகனத்திலிருந்து FNP-45 வகை துப்பாக்கியும் 3 தோட்டாக்களும், கையடக்க கத்தி, 22.5 கிராம் எடையிலான Methamphetamine போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார். சுட்டுக் கொலை செய்யப்பட்ட 35 வயது ஆடவர் இதுவரையில் RM500,000 மதிப்பிலானக் கொள்ளைச் சம்பவங்களை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

Penjenayah berusia 35 tahun yang terlibat dalam 34 kes samun ditembak mati polis di Bayan Lepas selepas melepaskan tembakan. Polis merampas senjata api, dadah dan barangan lain dari kenderaannya. Suspek dipercayai terlibat dalam samun bernilai RM500,000.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *