சுக்மாவில் சிலம்பம் நிலைத்திருக்கும்! - சிலாங்கூர் இளவரசர்

top-news
FREE WEBSITE AD

தற்போது சுகமாவில் பாரம்பரிய விளையாட்டானச் சிலம்பக் கலையை அதிகாரப்பூர்வ விளையாட்டாகச் சுக்மாவில் அங்கீகரிக்கப்பட்டதற்காகச் சிலாங்கூர் இளவரசர் Tengku Amir Shah Ibni Sultan Sharafuddin Idris Shah பாராட்டைத் தெரிவித்தது மட்டுமின்றி சுக்மாவில் நடைபெறும் சிலம்பப்போட்டியையும் நேரில் கண்டு மகிழ்ந்தார்.

கடந்த சுக்மா போட்டிகளில் கண்காட்சி விளையாட்டாக இருந்த சிலம்பம் இவ்வாண்டு முதல் பதக்கத்திற்கான விளையாட்டாக அங்கீகாரம் பெற்றதில் தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அடுத்தடுத்த சுக்மா போட்டிகளில் சிலம்பப் போட்டி கட்டாயமாக அங்கீகரிக்கப்பட்ட போட்டியாக இருக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.விளையாட்டுகளின் மூலமாகவும் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பதைத் தாம் நம்புவதாகச் சிலாங்கூர் இளவரசர் Tengku Amir Shah Ibni Sultan Sharafuddin Idris Shah தெரிவித்தார்.

சுக்மாவில் சிலம்பப் போட்டியில் PERAK 10 பதக்கங்களுடன் முதலிடத்திலும் PULAU PINANG 8 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், SELANGOR 7 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் WILAYAH PERSEKUTUAN, KEDAH, TERENGGANU, SARAWAK, SABAH, NEGERI SEMBILAN, MELAKA, PERLIS, JOHOR, KELANTAN, PAHANG ஆகிய மாநிலங்கள் என இதுவரையில் 14 தங்கப் பதக்கங்களும், 14 வெள்ளிப் பதக்கங்களும், 23 வெண்கலப்பதக்கங்களும் என மொத்தம் 51 பதக்கங்களைச் சிலம்பக் கலை வீரர்கள் பெற்றுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *