PROF இராமசாமிக்கு எதிராக RM859,131.29 மதிப்புள்ள 17 குற்றச்சாட்டுகள்!

- Sangeetha K Loganathan
- 14 May, 2025
மே 14,
பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் Dr Ramasamyக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகள் Sesyen நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை Sesyen நீதிமன்றத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்காக ராமசாமி வந்த நிலையில் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து நீதிமன்ற விசாரணையைக் கோரினார். கடந்த 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் பினாங்கு இந்து அறநிலை துறை தலைவராகப் பொறுப்பில் இருந்த போது நிதி மோசடிகளைச் செய்ததாக பேராசிரியர் Dr Ramasamy இந்த வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார்.
பேராசிரியர் Dr Ramasamyக்கு எதிராக மொத்தம் RM859,131.29 மதிப்பிலான 17 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் வாசித்தது. பினாங்கு இந்து அறநிலை துறைக்குச் சொந்தமானச் சொத்துகளை நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் வழங்கியது, அறநிலைதுறையின் நிதியைத் தனி தனி நிறுவனங்களுக்கு அளித்தது மருத்துவச் செலவுக்காக RM65,000 காசோலையைத் தனிநபருக்கு வழங்கியது, 2019 முதல் 2023 வரையில் அவர் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் எந்தவொரு நிதி பரிமாற்றத்திற்கும் நிர்வாகத்திடமிருந்து ஒப்புதல் பெறாமல் வழங்கியதால் பேராசிரியர் ராமசாமி மீது 13 பணமோசடி வழக்குகள் உட்பட 17 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
Bekas Timbalan Ketua Menteri Pulau Pinang, Prof Dr Ramasamy, menghadapi 17 pertuduhan penyelewengan dana bernilai RM859,131.29 ketika mengetuai Hindu Endowment Board dari 2019 hingga 2023. Beliau menafikan semua tuduhan dan mohon dibicarakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *