ராமசாமி மீதான வழக்கு! அரசியல் பழிவாங்கல்! முன்னாள் MP Charles Santiago குற்றச்சாட்டு!

top-news

மே 14,

பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் Dr Ramasamyக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் 17 பணமோசடி குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் என கிள்ளான் மூன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Charles Santiago தெரிவித்தார். பினாங்கு இந்து அறநிலை துறையின் மூலமாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பேராசிரியர் ராமசாமி போன்றவர்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக எதிர்த்ததால் இந்த குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்நோக்குவதாக Charles Santiago தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தை விமர்சிக்கும் நபர்களை அரசு நிறுவனங்கள் மூலமாகக் குற்றம் சாட்டப்பட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து நடக்க வேண்டும் என Charles Santiago வலியுறுத்தினார். இது பேராசிரியர் ராமசாமி மட்டும் சம்மந்தப்பட்ட குற்றச்சாட்டாகத் தாம் கருதவில்லை என்றும இது சீரான அரசியலைச் சீர்குலைக்கும் ஒரு நடவடிக்கையாகத் தாம் கருதுவதாகவும் இதுமாதிரியானச் செயல்பாடுகளால் அரசாங்கத்தின் கொள்கையும் பக்காத்தானின் நோக்கமும் கேள்விக்குறியாவதாகவும் Charles Santiago தெரிவித்தார்.

Bekas Ahli Parlimen Klang, Charles Santiago, mendakwa pertuduhan terhadap Dr Ramasamy merupakan tindakan balas dendam politik. Beliau menegaskan bahawa penggunaan institusi kerajaan untuk menyasarkan pengkritik adalah bertentangan dengan prinsip demokrasi dan mencemarkan imej kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *