ஐவரைக் கொன்ற விபத்து! வாகனமோட்டிக்கு ஜாமீன்!

- Sangeetha K Loganathan
- 14 May, 2025
மே 14,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்த ஐவரை மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஐவரும் உயிரிழந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 15 வயது சிறுவனுக்கு Majistret நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கூச்சிங்கில் உள்ள Jalan Stutong Baru சாலையில் 15 வயது சிறுவன் செலுத்திய வாகனத்தால் இந்த விபத்து ஏற்பட்டதால் சிறுவன் மீதான மேல் விசாரணையால் அவரின் கல்வி பாதிக்க கூடாது எனும் அடிப்படையில் இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தனது மகனை மேற்பார்வையின்றி வாகனத்தைச் செலுத்த அனுமதித்த சிறுவனின் தந்தைக்கு RM15,000 அபராதம் வழங்கப்பட்டதுடன் 100 மணிநேரங்கள் சமூகச் சேவையில் ஈடுபடும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு RM5,000 ஜாமீன் வழங்கப்பட்டதுடன், பெற்றோர்களையும் உத்தரவாததாரர்களாக இருக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜூன் 17 நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Remaja 15 tahun yang terlibat dalam kemalangan maut meragut lima nyawa di Kuching dibenar ikat jamin RM5,000 oleh Mahkamah Majistret. Bapanya didenda RM15,000 dan diarahkan jalani 100 jam khidmat masyarakat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *