இனி புதிய சாலைகளில் விலங்குகளுக்கு பிரத்தியேக சுரங்கப்பாதை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,மே 13 : நாட்டில் கட்டப்படும் அனைத்து புதிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் வனவிலங்குகள் சாலையை கடந்த செல்வதற்காக சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 இத்திட்டத்தின் நோக்கம் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும் என பொதுப்பணி அமைச்சு மேலும் கூறியது.

இதற்கு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், வனவிலங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வனவிலங்குத் துறையுடன் நெருங்கிய ஒத்துழைப்பு தொடரும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், வனவிலங்குகள் கடந்து செல்லும் பாதைகளில் ஓட்டுநர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மெதுவாகச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது!

Kerajaan akan membina terowong bawah tanah di semua lebuh raya baharu bagi memastikan keselamatan haiwan liar. Kementerian Kerja Raya berkata ia diluluskan oleh Jabatan Perlindungan Hidupan Liar dan Taman Negara serta akan bekerjasama rapat dengan mereka. Pemandu dinasihat berhati-hati.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *