சிலாங்கூர் எஃப்சி டிக்கெட் விலையைக் கட்டுப்படுத்தும்
- Hisha Thamil
- 29 May, 2024
பெட்டாலிங் ஜெயா, மே 30-
பெட்டாலிங் ஜெயா முனிசிபல் கவுன்சில் அரங்கத்தில் (எம்பிபிஜெ) நடக்கவிருக்கும் 2024/2025 சூப்பர் லீக் போட்டிக்கான டிக்கெட் விலையை சிலாங்கூர் எஃப்சி தொடர்ந்து கட்டுப்படுத்தும்.
இந்தப் பருவத்தில் ஒவ்வோர் ஆட்டத்தையும் ரசிகர்கள் பார்க்க விரும்புவதால், ஒவ்வொரு போட்டியிலும் ரெட் ஜெயண்ட்ஸ் மைதானத்தில் நிறைய ரசிகர்கள் இருப்பதை உறுதி செய்ய டிக்கெட் விலை கட்டுப்படுத்தப்படும் என்று சிலாங்கூர் எஃப்சியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜோஹன் கமல் ஹாமிடன் கூறினார்.
ஒவ்வோர் ஆட்டத்திலும் அரங்கத்தில் முழு வருகையைப் பெறுவதற்கு கடந்த பருவத்தைப் போலவே அதே டிக்கெட் விலையை நிர்ணயித்துள்ளோம் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஒரு போட்டிக்கு சராசரி யாக 7,000 முதல் 8,000 வரை ரசிகர்கள் வந்தனர்.
எனவே இம்முறை ஒரு போட்டிக்கு 30 விழுக்காடு கூடுதலாக 10,000 முதல் 11,000 ரசிகர்கள் வர வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதாக அவர் சொன்னார்.
நன்கொடையாளர்கள் ஆதரவின் மூலம் உணவு விற்பனையும் விளம்பரங்களின் மூலம் அணியின் வருமானத்தை ஈட்ட முடியும் என்று சிலாங்கூர் அணி நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது என்றார்.
சிலாங்கூர் எஃப்சி அதன் டிக்கெட் விலைகளை டயர் 1, டயர் 2 வகைப்பாட்டின் படி நிர்ணயித்துள்ளது.
அடுக்கு 1க்கான டிக்கெட் விலைகள் குழந்தைகளுக்கு 5 வெள்ளியும் திறந்தவெளி இடம் 25 வெள்ளியும் கிராண்ட்ஸ்டாண்ட் இடம் 30 வெள்ளியும் ஆகும்.
அடுக்கு 2க்கான டிக்கெட் விலைகள் குழந்தைகளுக்கு 5 வெள்ளியும் திறந்தவெளி இடம் 20 வெள்ளியும் கிராண்ட்ஸ்டாண்ட் இடம் 25 வெள்ளியும் ஆகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *