போலி ஆவணங்களைக் கொண்டு RM2.5 மில்லியன் மோசடி! 2 பெண்கள் உட்பட மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 14 May, 2025
மே 14,
போலியான நிறுவன ஆவணங்களைக் கொண்டு நிதி பெற விண்ணப்பித்த 2 பெண்கள் உட்பட மூவரையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்ததுள்ளது. கடந்த 2022 முதல் 2024 வரையில் RM2.5 மில்லியன் பண மோசடியில் சம்மந்தப்பட்ட மூவருக்கும் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரித்த நிலையில் முன்னாள் நிர்வாக இயக்குநரும் துணை நிர்வாக இயக்குநர்கள் இருவரும் நேற்று புத்ரா ஜெயாவில் உள்ள SPRM தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் இரவு 7 மணிக்குக் கைது செய்யப்பட்டதை SPRM பணமோசடி தடுப்புப் பிரிவின் இயக்குநர் Norhaizam Muhammad தெரிவித்தார்.
ஊழியர்களின் சம்பளப் பிடித்தம், ஊழியர் சேமிப்பு நிதி, ஊழியர்களில் போனஸ் போன்ற முக்கிய செலவீனங்களுக்கானக் கோரிக்கையில் இந்த தல் 2024 வரையில் RM2.5 மில்லியன் பண மோசடியில் ஈடுப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் 30 முதல் 40 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட மூவரும் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tiga individu termasuk dua wanita ditahan SPRM kerana disyaki menipu dana berjumlah RM2.5 juta menggunakan dokumen syarikat palsu antara 2022 hingga 2024. Mereka direman lima hari bagi siasatan lanjut berkaitan penyalahgunaan dana perbelanjaan syarikat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *