எதிர்காலத்தில் குழந்தைகளை பெற்றெடுப்பது மனிதர்களா? அல்லது இயந்திரமா?
- Muthu Kumar
- 16 May, 2024
இயந்திர மனிதர்களை மட்டுமே உருவாக்கி வந்த மனிதர்கள் இன்று முன்னேறி பிறக்கும் குழந்தைகளை கருவில் சுமக்காமல் செயற்கை கருவில் உருவாக்கி பிறக்க வைக்கும் காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றிய ஒரு தகவல்கள் தான் இந்த "எக்டோ லைஃப் லேப்" எனப்படும் செய்தி.
ஜப்பான், பல்கேரியா, தென் கொரியா போன்ற நாடுகளில் உள்ள பெண்கள் இயற்கையாக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முறையை விரும்பவில்லையாம். அதனால் அந்தந்த நாடுகளின் மக்கள் தொகை மிகவும் குறைந்து வருகிறது. இதற்காகத்தான் Ectolife Lab என்ற தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்
இந்த தொழில்நுட்ப முறையின் வழி வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகளை உருவாக்க முடியும். தந்தையின் விந்தணுவையும், தாயின் கருமுட்டைகளையும் மட்டும் கொடுத்தால் போதுமாம் சம்மந்தப்பட்ட தம்பதிகளின் குழந்தைகளை உருவாக்கித் தருகின்றார்கள் இந்த நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள்.
குழந்தை உருவாகும் முதல் நாளிலிருந்து செயற்கை கருப்பையில் இருந்து வெளிவரும் நாள் வரை தங்கள் கை தொலைபேசி மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள்.. குழந்தையை தொட்டுப் பார்ப்பதிலிருந்து, குழந்தைக்கு பாட்டு பாடுதல், கதை சொல்லுதல் வரை வீட்டில் இருந்தபடியே Ectolife ஆய்வுக்கூடத்தில் இருக்கும் குழந்தைக்கு "விர்ச்சுவல் ரியாலிட்டி" மூலம் குழந்தையின் பெற்றோர்கள் தொடர்பில் இருக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 300க்கும் மேற்பட்ட ஜீன்களின் உதவியோடு நம் முன்னோர்களுக்கு இருக்கும் நோய்கள் குழந்தைகளுக்கும் வராமல் தடுக்கவும் முடியும்.
அதையும் தாண்டி குழந்தையின் கண்ணின் நிறம், முடியின் நிறம், தோலின் நிறம், உடலின் வலிமை ,உயரம், அறிவுத்திறன் போன்றவற்றை தாய் தந்தை கேட்பது போல் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொள்ள முடியுமாம்..
குழந்தையை Ectolife ஆய்வுக்கூடத்தில் இருக்கும் செயற்கை கருப்பையில் இருந்து எடுத்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் பொழுது அந்த குழந்தை அவர்களுடையதுதானா என்பதை டிஎன்ஏ சோதையின் பின்பு தான் கொடுப்பார்களாம்.
நிறைய நிறுவனங்கள் இதுபோன்ற "ஆர்டிபிசியல் ஹோம் ஆய்வுக்கூடங்களை" உருவாக்கினாலும் 2018 ஆம் ஆண்டு ஒரு ஆட்டுக்குட்டியின் கன்றை வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறார்கள் மற்றொரு நிறுவனம்.
வரும் காலத்தில் சில நாடுகளில் இது போல் குழந்தை உருவாக்கும் முறையை பெண்கள் விரும்பினாலும் கலாச்சாரத்துடன் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்கள், இம்முறையை ஆதரிப்பார்களா என்றால் வரும் இயந்திரமான காலத்தைப் பொறுத்து தான் அமையும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து
எது எப்படியோ இயற்கையாக குழந்தையை பெற்றெடுக்கும் முறையே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் ஒரு பக்கம் கூறுகின்றனர்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *