RM203,484 மதிப்பிலான டீசல் கடத்தல்! மூவர் கைது!

top-news

மே 16,

அரசு விலையில் விற்பனை செய்யப்பட்டும் டீசலை சட்டவிரோதமாகக் கடத்தியதாக நம்பப்படும் மூவரை நெகிரி செம்பிலான் உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறை கைது செய்துள்ளது. போர்ட்டிக்சனில் உள்ள Kuala Sawah கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய படகுகளில் லாரியிலிருந்து குழாய் மூலமாகப் பரிமாற்றப்படுவதாகத் தகவல் கிடைத்ததும் நெகிரி செம்பிலான் KPDN அதிகாரிகளுடன் சம்பவ இடத்தைச் சோதனையிட்டதாக ஜொகூர் மாநிலக் காடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Muhammad Zahir Mazlan தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட பகுதியைச் சோதனையிட்டதில் 73,460 லிட்டர் டீசலைக் கைப்பற்றியதாகவும் 4 மோட்டார் லாரிகளையும் உபகரணங்களையும் பறிமுதல் செய்ததாகவும் Muhammad Zahir Mazlan தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட 73,460 லிட்டர் டீசலின் மதிப்பு RM203,484 என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களின் மொத்த மதிப்பு RM334,461 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுப்பட்ட 3 உள்ளூர் ஆடவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட மூவரும் 30 முதல் 50 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

Tiga lelaki tempatan ditahan kerana disyaki menyeludup 73,460 liter diesel bersubsidi di kawasan Kuala Sawah, Port Dickson. Nilai diesel dianggarkan RM203,484 dan peralatan rampasan mencecah RM334,461. Kes disiasat oleh KPDN dan Maritim Johor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *