குலதெய்வ கோவிலில் இருந்து ஐந்து பொருட்களை எடுத்து வந்தால் அதிர்ஷ்டம்!

top-news
FREE WEBSITE AD

நமது வீட்டில் ஏதேனும் ஒரு சுபகாரியம் நடப்பதாக இருந்தால், அதனை முதலில் நமது குலதெய்வ கோவிலுக்கு சென்று தான் கூறுவோம்.இவ்வாறு குலதெய்வத்தின் அருளுடன் நாம் ஒரு செயலை செய்தோம் என்றால், அந்த செயலில் வெற்றியும் முன்னேற்றமும் பெறலாம்.
இந்த குலதெய்வ கோவிலுக்கு சென்று, அங்கு உள்ள மிகவும் முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த சில பொருட்களை நமது வீட்டிற்கு எடுத்து வருவதன் மூலம் பல விதமான நன்மைகள் நடைபெறும் என்று கூறுகின்றனர்.

1. குலதெய்வ கோவிலின் மண்:
வீட்டில் அளவுக்கு அதிகமான கண் திருஷ்டி, எதிரிகளின் தொல்லை, அதிகப்படியான பொறாமை இது போன்ற எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக நமது வீட்டில் இருப்பதாக தோன்றினால், குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி அளவு மண் எடுத்து வர வேண்டும்.

இந்த குலதெய்வ மண்ணை சிவப்பு நிற அல்லது மஞ்சள் நிற துணியினால் கட்டி, நமது வீட்டின் நிலை வாசல் அல்லது வீட்டின் எந்த இடத்தில் இருந்தால் அதிகப்படியான மன அழுத்தம், குழப்பங்கள் இதுபோன்று தோன்றுகிறதோ அந்த இடத்தில் அல்லது ஏதேனும் ஒரு அறைகளில் இந்த மண்ணை வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நமது குலதெய்வத்தின் பாதம் பட்ட மண்ணை, நமது வீட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் நமது வீட்டில் உள்ள தீய சக்திகளை அழித்து நமது குலதெய்வமே நமக்கு துணையாக இருப்பது போன்று அர்த்தம்.

2. எலுமிச்சம் பழம்:
பொதுவாக நமது குலதெய்வ கோவிலுக்கு சென்றாலே, நமது குலதெய்வத்தில் பாதத்தில் இருந்த அல்லது மடியில் இருந்த அல்லது சூலாயுதத்தில் இருந்த எலுமிச்சம் பழத்தை நமக்கு கொடுப்பார்கள். இந்த எலுமிச்சம் பழத்தை நமது பூஜை அறையில் வைப்பதன் மூலம் குலதெய்வத்தின் சக்தி நமது வீட்டில் நிறைந்து இருப்பதாக அர்த்தம்.

மேலும் இந்த எலுமிச்சம் பழத்தை தொழில் செய்யக்கூடிய இடம், கல்லாப்பெட்டி, படிக்கக்கூடிய இடம் இது போன்ற இடங்களிலும் வைத்துக் கொள்ளலாம்.

3. தீ மிதிக்க கூடிய சாம்பல்:
உங்கள் குலதெய்வ கோவிலில் தீ மிதிக்கும் பழக்கம் இருந்தால் அதிலிருந்து சாம்பலை நமது வீட்டிற்கு எடுத்து வரலாம். இந்த சாம்பலை நமது பூஜை அறையில் விபூதி வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

இந்த சாம்பலை நாம் தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொழுது காரிய தடைகள் நீங்கும், கண் திருஷ்டிகள் அகலும், வெற்றிகள் நம்மை வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

4. சந்தனம்:
உங்கள் குலதெய்வ கோவிலில் சந்தனம் காப்பு செய்யக்கூடிய முறை இருந்தால், அந்த சந்தனத்தையும் நமது வீட்டிற்கு எடுத்த வரலாம். இந்த சந்தனத்தை நமது வீட்டில் வைப்பதன் மூலம் குலதெய்வத்தின் சக்தி நமது வீட்டில் நிறைந்து இருக்கும்.

சந்தனம் என்பது தொழிலில் நல்ல முன்னேற்றம், பதவி உயர்வு, கல்வியில் நல்ல ஞானம் இது போன்றவைகளை தரக்கூடிய மகிமை வாய்ந்த பொருளாக திகழ்கிறது. மேலும் சந்தனம் என்பது செல்வத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சக்தியாகவும் கூறப்படுகிறது.

5. தாலி சரடு:
நமது குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுதே தாலி சரடினை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் கோவிலிலேயே வாங்கி கடவுளின் மடியில் வைத்து வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இந்த தாலி சரடினை வீட்டில் உள்ள பெண்கள் கட்டிக் கொள்வதன் மூலம் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறலாம்.

மேலும் நீண்ட ஆயுளையும், குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை ஆகியவை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த தெய்வம் தான் குலதெய்வம். உங்கள் வீடுகளில் சில பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றால், இந்த ஐந்து பொருட்களை குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டு வந்து நமது வீட்டில் வைக்கும் பொழுது, அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி ஆகும் என்று கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *