மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 3: மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக  ஆணையமான எம்.சி.எம் சி இந்த ஆண்டு மட்டும் ஆகஸ்டு 15 வரை 32,676 மோசடி இடுகைகளை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் இவ்வெண்ணிக்கை 6,297 ஆக  இருந்தது.

2021 மற்றும் ஏப்ரல் 2024 க்கு இடையில் ஆன்லைன் மோசடிகளால் மலேசியர்கள் RM3.18 பில்லியனை இழந்துள்ளதாக தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

சமூக ஊடக தள வழங்குநர்களுடன் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் ஈடுபாடு இருந்தபோதிலும், அதிகரித்து வரும் வழக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இழப்புகள் சைபர் கிரைம்களில் ஆபத்தான உயர்வைக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடக தளங்கள் AI- உள்ளடக்கத்திற்கான முதன்மை டொமைனாக மாறி வருவதால், அவற்றை பொது பயன்பாடுகளாக வகைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று தியோ அறிவுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *