அதிர்ஷ்டம் தரும் உருளி!

top-news
FREE WEBSITE AD


இப்போதெல்லாம் வீடுகளிலும், கடைகளிலும் உருளியை அதிகம் மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் என்ன பயன்? எந்த முறையில் உருளியை வைக்கலாம் என்பதை பற்றி  இந்த காணொளியில் காணலாம்.

வீட்டின் வாசலிலோ அல்லது பெரிய கடைகளிலோ பார்த்திருப்போம். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மலர்களை போட்டு வைத்திருப்பார்கள். இதன் பெயர் தான் உருளியாகும்.

உருளியை வீட்டின் வாசலிலோ, கடைகளின் வாசலிலோ வைக்கலாம். வீட்டினுள் கன்னி மூலையிலும், தென்மேற்கு மூலையிலும், வரவேற்பறையிலும் வைக்கலாம். இதை வைப்பதால் நேர்மறையான எண்ணங்கள் (பாசிட்டிவ் வைப்பிரேஷன்) கிடைக்கும். இந்த உருளி வைக்கும் பழக்கம் பழங்காலம் முதலாகவே இருக்கிறது. நம் முன்னோர்கள் இதை வீட்டின் வாசலிலே வைத்ததற்கு காரணம் அழகு என்பதையும் தாண்டி நேர்மறையான எண்ணங்கள் (பாசிட்டிவ் வைப்பிரேஷன்) தருகிறது என்ற காரணத்தாலும் வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உருளியை கடையிலோ அல்லது வீட்டிலோ வைப்பதனால்  என்ன நன்மை என்றால், வியாபாரத்தில் நஷ்டமில்லாமல் லாபம் பெருகிக்கொண்டே வரும். வியாபார இடங்களில் உள்ள  எதிர்மறையான எண்ணங்கள் நீங்கி நேர்மறையான எண்ணங்களை கொடுக்கும் . வீட்டிலுள்ள சண்டை சச்சரவு நீங்கி செல்வ செழிப்பு பெருகும்.

இந்த உருளியை மண்ணிலும் வைக்கலாம், பித்தலையிலும் பயன்படுத்தலாம், பீங்கான் மற்றும் கண்ணாடி பொருட்களில் வைக்கலாம். இதை எதில் வைக்க கூடாதென்றால், எவர்சில்வர், பிளேஸ்டிக், அலுமினியம், இரும்பு ஆகியவற்றில் வைக்க கூடாது. இதை வீட்டின் நுழைவாயிலில் வலதுபுறத்திலோ அல்லது இடதுப்புறத்திலோ வைக்கலாம். வீட்டில்  எல்லோரும் கூடும் அறைகளில்  வைக்கலாம்.

உருளியில் நல்ல சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள், பச்சை கற்பூரம், வாசனை திரவியமான ஜவ்வாது, வெட்டிவேர் என  சிலவற்றையும் சேர்ப்பார்கள்.உருளியில் வைக்கக்கூடிய மலர் ஒன்று நறுமணம் மிக்கதாக இருக்க வேண்டும் இல்லையேல் மருத்துவ குணம் உள்ளதாக இருக்க வேண்டும்.

உருளிக்கே விசேஷமானது தாமரைப்பூ தான். சாமந்தி, ரோஜாப்பூ, மல்லி என்று கலர் கலராக மலர்களை வைக்க வேண்டும். செவ்வரளியை உருளியில் பயன்படுத்த கூடாது. ஏனெனில் இந்த மலர்  வீட்டில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

உருளியில் உள்ள நீரை தினம் தோறும் புதிதாக மாற்றி விடுவது என்பது சிறந்தது. அப்படி இல்லை என்றால் இரண்டு நாளைக்கு ஒருமுறை மாற்றிவிடுவது நல்லதாகும்.

நம் வீட்டுக்கு வருபவர்களின் முதல் பார்வை உருளியின் மீது படுவதால் கண் திருஷ்டி ஏற்படாது. வீட்டில் மனநிம்மதியும், செல்வமும் செழிக்கும். உருளி சிறியது, பெரியது என்று விலைக்கு ஏற்ற அளவில் விற்கப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும்.தொழில் செய்யும் இடங்களிலும் இந்த உருளி வைக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *