பாப்பராயுடுவுக்கு எதிராகக் கேள்விக் கேட்டால் கைதா? – உரிமை கட்சி சவால்!

top-news
FREE WEBSITE AD

சிலாங்கூரில் இந்தியர் மேம்பாட்டு நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள  iSEED & SITHAM குறித்து உரிமை கட்சி உறுப்பினர்களான குணசேகரன்  & சுந்தரராஜூ என இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு பின்னனியில் Banting சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான Papparaidu Veraman இருப்பதாக உரிமை கட்சியின் டேவிட் மார்ஷலும் உரிமை கட்சியில் செயலாளர் SATEES MUNIANDY ஆகியோர் குற்றம் சாட்டினர்.

iSEED  என்பது சிலாங்கூர் அரசாங்கத்தால் இந்தியர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ள திட்டம், இது சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினரான Papparaidu நேரடி பார்வையில் இயங்குகிறது. ஆனால் அதன் செயல்பாடுகள் குறித்தான எந்தவொரு விவரங்களும் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என்பதால் இதனை மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான Papparaidu முறையாக நிர்வாகிக்க வேண்டும் என உரிமை கட்சியின் உறுப்பினர்களான குணசேகரன்  & சுந்தரராஜூ என்பவர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியதால் அவர்களைக் காவல் துறை விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என டேவிட் மார்ஷலும் சத்தீஸ் முனியாண்டியும் தெரிவித்துள்ளனர்.

இப்போது சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினரான Papparaidu Veraman குறித்து தானும் கேள்வியைக் கேட்கிறேன், என்னையும் கைது செய்யுங்கள் என டேவிட் மார்ஷல் சவால் விடுத்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *