திங்கள் : 5 மே, 2025
3 : 36 : 52 PM
முக்கிய செய்தி

ரஷ்யா தனது ராணுவத்தில் வடகொரிய படைகளை சேர்த்துள்ளது கவலை அளிக்கிறது-ஜோ பைடன்.

top-news
FREE WEBSITE AD

ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்புடன் இணைய இருந்த நிலையில் ரஷ்யா அதன் மீது போரை தொடுத்தது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போரால் உக்ரைன், ரஷ்யா இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ரஷ்யாவில் ஏராளமான ராணுவ வீரர்கள் பலியான நிலையில், கட்டாய ராணுவ சேர்க்கை மூலம் மேலும் பலரை ராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தற்போது வடகொரியா ரஷ்யாவுக்கு அதிசிறப்பு வாய்ந்த 10 ஆயிரம் பேர் கொண்ட படையை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதேசமயம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுத உதவி, பொருளுதவி வழங்கி வருகின்றனர். ரஷ்யா தனது ராணுவத்தில் வடகொரிய படைகளை சேர்த்துள்ளது கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளதுடன், அவர்கள் உக்ரைனுக்குள் அடியெடுத்து வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் பேசியுள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்காவின் துணைத் தூதர் ராபர்ட் வுட் கூறுகையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் (வடகொரியா) துருப்புக்கள் உக்ரைனுக்குள் நுழைய வேண்டுமா? அவர்களின் இறந்த உடல்கள் மட்டுமே அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் என்று நான் அவர்களிடம் கூற விரும்புகிறேன். எனவே நான் இதுபோன்ற பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன் கிம்முக்கு இருமுறை யோசிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *