சீனா வலியுறுத்தினாலும், மலேசியா நிறுத்தாது! – அன்வார் திட்டவட்டம்

top-news
FREE WEBSITE AD

விளாடிவோஸ்தோக்‌, செப்‌. 6-  சரவாக்‌ கடல்‌ பகுதிக்கு அப்பால்‌ மேற்கொள்ளப்‌ பட்டுவரும்‌ எண்ணெய்வள ஆய்வுப்பணிகளை உடனடியாக நிறுத்திக்‌கொள்ளும்படி சீனா வலியுறுத்தியிருந்தாலும்‌, தன்னுடைய  எல்லைக்குள்‌ நடைபெற்றுவரும்‌ அப்பணிகளை மலேசியா நிறுத்தாது என்று பிரதமர்‌ டத்தோஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிம்‌ நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்‌.

மலேசியா தற்போது மேற்கொண்டுவரும்‌ எண்ணெய்‌ அகழ்வாய்வுப்‌ பணிகள்‌ நாட்டின்‌ கடல்‌ பகுதிக்குள்தான்‌ நடைபெற்று வருகின்றன. அதில்‌ சந்தேகம்‌ இல்லை. ஆனாலும்‌, மலேசியாவின்‌ இந்த நிலைப்பாட்டை சீனாவிடம்‌ விளக்குவோம்‌. சீனா எங்களின்‌ தோழமை நாடு. ஆனால்‌, எங்களின்‌ கடல்‌ எல்லைக்குள்‌ எண்ணெய்‌ தோண்டுவது உள்ளிட்ட பணிகளை நாங்கள்‌ மேற்கொண்டுதான்‌ ஆக வேண்டும்‌ என்றார்‌ அன்வார்‌.

மலேசியா தற்போது எண்ணெய்வள ஆய்வுப்‌ பணிகளை நடத்திவரும்‌ சரவாக்‌ கடலின்‌ ஒரு பகுதி தனக்குச்‌ சொந்தமானது என்று உரிமை கொண்டாடி சீனா ஆட்சேபக்‌ குறிப்பை அனுப்பி. வைத்துள்ளது. அதனை நாங்கள்‌ ஏற்க முடியாது. நாட்டின்‌ பொருளாதாரப்‌ பாதுகாப்புக்கு. அடித்தளமாக விளங்கிவரும்‌ எண்ணெய்‌ அகழ்வாய்வுப்‌ பணிகளை நாங்கள்‌ தொடர்ந்து மேற்கொண்டு வருவோம்‌ என்று ரஷ்யாவின்‌ விளாடிவோஸ்தோக்‌ நகரில்‌ நேற்று நடைபெற்ற செய்தியாளர்‌ கூட்டத்தில்‌ அன்வார்‌ குறிப்பிட்டார்‌.

ஒன்பதாவது கிழக்கத்திய பொருளாதார ஆய்வரங்கில்‌ கலந்து கொள்வதற்காக ரஷ்யாவின்‌ தூர கிழக்கு நகரான விளாடிவோஸ்தோக்‌ நகருக்கு அன்வார்‌ வந்துள்ளார்‌. மலேசியாவும்‌ சீனாவும்‌ தங்களுக்கு இடையிலான சர்ச்சைகளை நண்பர்கள்போல்‌ சுமுகமான முறையில்‌ பேசித்‌ தீர்த்துக்‌ கொள்ள மூடியும்‌. இந்த சர்ச்சையைச்‌ சீனா தொடருமானால்‌, நாங்கள்‌ தொடர்ந்து பேச்சு நடத்திவருவோம்‌. எங்களின்‌ வாதங்களை அவர்களும்‌ அவர்களின்‌ வாதங்களை நாங்களும்‌ செவிமடுப்போம்‌. ஆனால்‌, இரு நாடுகளின்‌ உறவுக்குப்‌ பாதிப்பை ஏற்படுத்தும்‌ வகையில்‌ இது இருக்காது என்றார்‌ அன்வார்‌.

சரவாக்கின்‌ கடல்‌ பகுதிக்கு அப்பால்‌ எண்ணெய்‌ வளமிக்க. பகுதிகளில்‌ எரிவாயு மற்றும்‌ எண்ணைய்‌ தோண்டும்‌ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்‌ கொள்ளும்படி அரசதந்திரக்‌ குறிப்பொன்றை மலேசியாவுக்கு சீனா அனுப்பி வைத்திருப்பதாகத்‌ தகவல்கள்‌ வெளியாகி உள்ளன. சம்பந்தப்பட்ட அப்பகுதி மலேசியாவின்‌ கடல்‌ எல்லைக்கும்‌ சிறப்புப்‌ பொருளாதார மண்டலத்திற்கும்‌ உட்பட்டதாகும்‌!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *