பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்பச் செலுத்தும் விதிகளில் விலக்கு வேண்டும்! - டோனி ஃபெர்னாண்டஸ்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர். ஆகஸ்ட் 30: போக்குவரத்து அமைச்சின் பணத்தைத் திரும்பப்பெறும் விதி விமான நிறுவனங்களுக்கு மட்டுமின்றி விமான நிலைய ஆபரேட்டர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் பொருந்தும் என  ஏர் ஏசியாவின் கேபிடல் ஏ  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் ஐந்து மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட விமான தாமதங்களுக்கு, முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்று அறிவித்தார்.

இருப்பினும், சப்ளையர்களால் ஏற்படும் தாமதங்கள், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) செயலிழப்பு போன்றவற்றின் சாத்தியக்கூறுகள் இருப்பதால், விதியில் சில விலக்குகள் இருக்க வேண்டும் என்று பெர்னாண்டஸ் கேட்டுக்கொண்டார்.

கூட்ட நெரிசல் பிரச்சனை மற்றும் வானிலை போன்ற பல சிக்கல்கள் உள்ளன. பெரிய விநியோகச் சங்கிலி சிக்கல்கள் உள்ளனமேலும் அனைத்து விமான நிறுவனங்களும் மோசமான இயந்திர நம்பகத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அதை (பயணிகளுக்குத் திரும்பப் பெற) நாங்கள் சொல்ல வேண்டியதில்லைஏனென்றால் நாங்கள் எப்படியும் அதைச் செய்யப் போகிறோம். எனவே, பயணிகள் மீண்டும் முன்பதிவு செய்வது சரியானது மற்றும் நியாயமானது. தாமும் அவ்வாறே உணர்வதாக அவர் கூறினார். ஆனால் ஒரு விமான நிறுவனத்தை இயக்குவது கடினமானதுஎடுத்துக்காட்டாக, எஞ்சின்கள் மற்றும் உதிரி பாகங்களை பெற சப்ளையர்களைத்தான் தாங்கள் நம்பியுள்ளோம் என்று அவர் கூறினார்.

 உலகளாவிய ஐடி செயலிழப்பால் விமான நிறுவனங்கள் மில்லியன் கணக்கான வருவாயை இழந்துள்ளதாகவும், கணினி தோல்விகளால் மக்களின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் நினைவுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *