மை கிஷோக் - சிறு வியாபாரிகளுக்கு முன்னுரிமை!

- Shan Siva
- 14 May, 2025
கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மைகிசோக் (வணிகக் கூடாரம்) என்னும் சிறு வியாபாரிகளுக்கான திட்டம் வெற்றிகமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சித்தியவான் நகரப்பகுதியில் வழங்கப்பட்ட மைகிசோக் திட்டத்தில் 3 இந்திய பெண்களும் தங்கள் மாத வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளனர். இவர்கள் பல்வேறு வகையான மிகவும் ருசியான சுகாதாரத் தரவுபடி உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
மடானி அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்தத் திட்டத்தில் எந்தச் சமூகமும் ஓரங்கட்டப்பட மாட்டர்கள். அந்நிலையில், சாராசரி ஒரு குடும்பத்துக்கு மாத வருமானம் குறைந்த பட்சம் ரிம5,000 கிடைக்கும் வாய்ப்பு சிறப்பாக உள்ளது என்று அவர் கூறினார்.
மடானி அரசாங்க கொள்கையின்படி இந்த மைகிசோக் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வணிக இடம் அரசாங்கத்தினால் உறுதிச் செய்யப்பட்ட இடமாகும்.
மேலும், இந்த திட்டத்தில் சிறு வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என அமைச்சர் கோர் மிங் எடுத்துரைத்தார்.!
Tiga wanita India berjaya menambah pendapatan bulanan melalui projek Mykiosk di Sitiawan. Menteri Nga Kor Ming menyatakan program ini beri peluang niaga adil kepada semua kaum. Tapak disediakan kerajaan dan dijangka jana RM5,000 sebulan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *