Mount Bromo எனும் எரிமலையில் 700 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை

top-news
FREE WEBSITE AD

இந்தோனேசியாவில் உள்ள Mount Bromo எனும் எரிமலையில் 700 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலையொன்றை இன்றும் மக்கள் வணங்கி வரும் அதிசயம்..

இந்த விநாயகர் சிலையானது எரிமலை வெடிக்காமல் இருக்க தங்கள் நம்புவதாக  அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.சீனா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையில்  எரிமலைகள் செயலில் இருக்கின்றன.

இந்தோனேசியாவில் அப்படி கிட்டத்தட்ட 141 எரிமலைகள் உள்ள நிலையில் அதில் குறைந்தது 130 எரிமலைகள் இன்னும் செயலில் உள்ளதோடு செயலில் உள்ள எரிமலைகள்  எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இவ்வாறு சில காலமாக வெடித்து கொண்டிருந்த கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள  Mount Bromo எரிமலை இப்போது வெடிப்பதில்லை.

அதற்கு காரணம் இங்குள்ள விநாயகர் சிலையென மக்கள்  நம்பிக்கையுடன் தெரிவிப்பதோடு அதன் காரணமாக "ப்ரோமோ (Bromo)" என்ற சொல் இந்து முறைப்படி படைப்பின் கடவுளான பிரம்மாவின் ஜாவானிய உச்சரிப்பிலிருந்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2012 வரையிலான பதிவுகளின்படி, இந்தோனேசியாவின் முழுப்பகுதியிலும் 127 செயலில் எரிமலைகள் இருந்ததாகவும் ,அதில் மவுண்ட் ப்ரோமோ எரிமலை பகுதியும் ஒன்றாக காணப்பட்டது. அங்கு டெங்கர் மாசிஃப் பழங்குடியினர்  அதிகம் வசிப்பதாக கூறப்படுகின்றது.

இந்த எரிமலை அடிக்கடி வெடித்ததால் அங்குள்ள மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த மலையை வெடிக்காமல் பாதுகாக்க 700 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் மூதாதையர்கள் இங்கு ஒரு விநாயகர் சிலையை வைத்ததாகவும் அன்றில் இருந்து இன்று வரை இந்த எரிமலை சீற்றம் இடம்பெறவில்லையென மக்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.இந்த எரிமலையில் இருந்து விநாயகப் பெருமான் தங்களைக் காப்பாற்றுவதாகவும் உள்ளூர் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அவர்கள் விநாயகருக்கு ஏராளமான பிரசாதங்களுடன்  விநாயகப் பெருமானை வழிபடுவது மட்டுமல்லாமல் பூக்கள் மற்றும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.ஆனால், எரிமலை வெடித்தாலும் கணபதி வழிபாடு இங்கு நிற்காததுடன் காலம் , அபாயம் மற்றும் எரிமலை வெடிப்பு என்று எதனையும் பொருட்படுத்தாமல் இங்கு இந்த விநாயகரை வழிபடும் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதாம்.

இதனால் இந்தோனேசியா வரும் சுற்றுலா பயணிகள்  அதிக அளவு இந்த வியப்பான  இடத்திற்கு  வருகை தந்து  வணங்கி செல்கிறார்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *