ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் மற்றும் காந்தியடிகள் இருவர் பற்றிய நட்பின் அரிய தகவல்கள்!
- Muthu Kumar
- 19 May, 2024
மகாத்மா காந்தி அடிகள் முன்னெடுத்த மிகப்பெரிய ஆயுதமான அகிம்சை முறை உருவாகுவதற்கும், உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்களின் படைப்பான வார் அண்ட் பீஸ் எனும் புகழ்பெற்ற புத்தகம் உருவாவதற்கும் முக்கிய காரணம் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
லண்டனில் வெளிவந்த நியூஸ் வீக்லி என்ற பத்திரிக்கையில் டால்ஸ்டாய் எழுதிய "இந்துவுக்கு ஒரு கடிதம்" என்ற கட்டுரையை காந்தியடிகள் படிக்க நேர்ந்தது. அந்த கட்டுரையில் 3000 ஆங்கிலேயர்கள் சேர்ந்து 20 கோடி இந்திய மக்களை அடிமைப்படுத்தியது ஆங்கிலேயர்கள் சாமர்த்தியம் இல்லை. இந்தியர்கள் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட நிலை என்று கூறி இருந்தார். இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் தமக்கு ஏற்பட்ட தாக்கத்தை டால்ஸ்டாய்க்கு காந்தியடிகள் ஒரு கடிதம் மூலம் எழுதினார்.
அதுமட்டுமல்லாமல் அவர் எழுதிய அந்த கட்டுரையை டால்ஸ்டாய் அனுமதியோடு காந்தியடிகள் மொழிபெயர்த்தார். அதன் பின் இருவருக்கும் நல்ல நட்பு உருவானது.
ஒரு வன்முறையை எதிர்க்க மற்றொரு வன்முறையை கையில் எடுக்காமல் அமைதியான முறையை செயல்படுத்தலாம் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்று டால்ஸ்டாய் யிடம் காந்தியடிகள் கேட்டார்.
அதற்கு ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் உங்கள் நாட்டில் தென்னிந்தியாவில் தமிழ் தெய்வப் புலவரான திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை ஜெர்மன் மொழிபெயர்ப்புடன் தான் படிக்கும் பாக்கியம் கிடைத்ததாகவும் அந்த திருக்குறளில் உள்ள "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்ற குரலை படித்தவுடன் அதில் உள்ள கருத்துக்கள் தன்னை மிகவும் பாதித்ததாகவும்,தாங்கள் பாராட்டு தெரிவித்த கருத்துக்கள் திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் டால்ஸ்டாய் கூறினார்.
இப்படி திருக்குறளை உதாரணம் காட்டி திருக்குறளை காந்தி அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய்.
இதை அறிந்த உணர்ந்த காந்தியடிகள் லண்டன் சிறையில் இருந்த பொழுது ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய திருக்குறள் முழுவதைம் படித்துவிட்டு திருக்குறள் அருமை தெரிந்து அகிம்சை வழியை உருவாக்கி அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தான் ஒரு தமிழனாக பிறக்க வேண்டும் என்றும், தமிழில் திருக்குறளை தான் படித்து மகிழ வேண்டும் என்றும் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் லண்டனில் வாழ்ந்த விக்டோரியா மகாராணி தினம்தோறும் ஒரு திருக்குறள் படித்து அதன் பொருளை உணர்ந்து மகிழ்ந்திருக்கிறார்.
இன்றும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் திருக்குறள் தனி இடத்தை பிடித்திருக்கிறது.
இரும்பு மனிதர் அழைக்கப்பட்ட ரஷ்யாவின் புரட்சியாளரான ஸ்டாலின் தன்னுடைய பாதாள அறையில் பாதுகாப்பாக திருக்குறளை வைத்தவரலாறு என நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் திருக்குறளைப் பற்றி உள்ளது.
திருக்குறளின் அருமை திருவள்ளுவனை பெற்றெடுத்த தமிழ் மண்ணுக்கு அவ்வளவு தெரியாமல் இருக்கும் பொழுது அந்நிய நாட்டவர்களின் பெருந்தலைவர்களுக்கு திருக்குறள் பெரும் தூண்டுதலாக இருந்தது- நமக்குப் பெருமை என்று நினைக்கும் வேளையில் நாமும் திருக்குறள் வழி வாழ கற்றுக் கொண்டால் நம் சமுதாயம் நாளைய வரலாற்றில் தனி இடம் பிடிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வாழ்க தமிழ் வளர்க தமிழின் புகழ்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *