2018 முதல் கொள்ளையிட்டு வந்த நால்வரை போலீஸார் சுட்டுக்கொன்றனர்! ஜலான் இம்பியில் போலீஸ் அதிரடி
- Shan Siva
- 13 Nov, 2024
புக்கிட் அமான்
குற்றப் புலனாய்வுப் பிரிவு, மற்றும் ஜேஎஸ்ஜே
கோலாலம்பூர் காவல் படை பிரிவு நேற்றிரவு 11.30 மணியளவில் ஜாலான் இம்பியில் உள்ள குடியிருப்பின் 17 வது மாடியில்
மேற்கொண்ட சோதனையை அடுத்து, சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
40 வயதுடைய சந்தேக நபர்கள் நால்வரும், போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த
முயன்றதை அடுத்து, அவர்கள் சுடப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத்
தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
போலீஸ்
விசாரணையின் முடிவில், சந்தேக நபர் போலீஸாரைத் தாக்க பயன்படுத்தப்பட்ட
இரண்டு கத்திகள் மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் ஆயுதம் வைத்திருந்தது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் சம்பவம் நடந்த இடத்தில் கூறினார்.
கொல்லப்பட்ட
இந்தத் திருட்டுக் கும்பல் அடிக்கடி
வெளியேறி நாட்டிற்குள் நுழைவார்கள் என்று நம்பப்படுவதாகவும், அலுவலகங்களுக்குள்
நுழைந்து திருடுதல், வீடுகளில் கொள்ளை
என இரவு நேரத்தில் இயங்கி வந்ததாகவும் ருஸ்டி முகமட் இசா கூறினார். சுமார் 43 லட்சம் பணத்தை
குவித்துள்ளனர் என்றும் ருஸ்டி சுட்டிக்காட்டினார்.
இவர்கள் பொதுவாக
குற்றங்களைச் செய்வதற்கு முன் கண்காணிப்புகளை மேற்கொண்ட பின்னரே ஆளில்லாத
அலுவலகங்கள் மற்றும் வீடுகளை இலக்கு வைத்து திருடி வந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்தக் குழுவில்
எஞ்சியிருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று
வருவதாகவும், அவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பான விசாரணையை நிறைவு
செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக கடந்த திங்கள் கிழமை ஸ்ரீ ஹர்த்தாமாஸில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளைச் சம்பவத்தில்
இக்கும்பல் ஈடுபட்டதை போலீஸார் கண்டுபிடித்ததை அடுத்து, இக்கும்பல்
சிக்கியதாக ரூஸ்டி இசா தெரிவித்தார்.
இதனை அடுத்து அனைத்து
உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் (HKL) மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *