ஊழலில் ஈடுபடும் யாரையும் நான் பாதுகாக்க மாட்டேன்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கெய்ரோ நவம்பர் 14: ஊழலில் ஈடுபடும் எவரையும் தாம் பாதுகாக்க மாட்டேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

எட்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் உட்பட அனைத்து ஊழல் வழக்குகள் குறித்தும் விசாரணை நடத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விட்டுவிடுவதாக அன்வார் கூறினார்.

பிரதமர் பதவியைப் பயன்படுத்தி யாருக்கும் பாதுகாப்பு அளிக்கமாட்டேன். அதை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்... ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு  அத்தகைய உறுதியை நான் கொடுக்க மாட்டேன் என்று அன்வார் தெரிவித்தார்.

ஊழலில் ஈடுபடாதவர்களுக்கு மட்டுமே நாங்கள் பாதுகாப்பு வழங்குகிறோம் என்பது ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கை. அது  தெளிவாக உள்ளது  என்று அவர் தனது நான்கு நாள் எகிப்து  பயணத்தி  முடிவில் மலேசிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எனவே, ஊழலில் ஈடுபட்டுள்ளாரா என்பது உள்ளிட்ட தகவல்கள் இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட, அதைக் கவனமாக ஆராய்ந்து விசாரிக்க வேண்டும்  என்று அவர் மேலும் கூறினார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி, ஒரு வாடிக்கையாளரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூறாயிரக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள லஞ்சம் பற்றி விவாதித்ததாகக் கூறப்படும் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆடியோ பதிவு வைத்திருப்பதாகக் கூறி, அக்டோபர் 30 அன்று அதன் தலைமையகத்தில் சந்தித்ததை உறுதிப்படுத்தினார். 

அதிகாரிகளிடம் 17 வினாடிகள் நீளமான ஆடியோ ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் பலர் பணம் தொடர்பாக பேசியதைக் கேட்டதாகவும் அசாம் பாக்கி கூறியிருந்தார்.

இந்நிலையில், எம்.ஏ.சி.சி.யிடம் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன், பிரதமருக்கு பாதுகாப்புக் கோரி கடிதம் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அன்வார், எகிப்தில் இருப்பதால், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி எந்தத் தனிநபரிடமிருந்தும் தனக்கு எந்தக் கடிதமும் வரவில்லை என்று கூறினார்.

கடிதம் அனுப்பப்பட்டாலும், மேலதிக விசாரணைக்காக எம்ஏசிசியிடம் ஒப்படைக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எனக்கு ஒரு கடிதம் (பாதுகாப்புக் கோரி) கிடைத்தால், அதை நேரடியாக எம்ஏசிசியிடம் ஒப்படைப்பேன்.. அந்தக் கடிதத்தை எடுத்து அடுத்த நடவடிக்கைக்கு முழுமையாகப் பரிசீலனை செய்யட்டும்” என்று அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *