UPSR - PT 3 தேர்வுகள் இனி கிடையாது! - கல்வி அமைச்சு திட்டவட்டம்
- Shan Siva
- 12 Nov, 2024
கோலாலம்பூர்,
நவ. 12 - ஆரம்பப்பள்ளி அடைவுநிலைத் தேர்வும் (யூபிஎஸ்ஆர்) மூன்றாம் படிவ மதிப்பீட்டுத்
தேர்வும் (பிடி3) மீண்டும் தொடரப்படாது.
அவ்விரு தேர்வுகளும் பொருத்தமற்றவை என்று அறிவித்து, முறையே கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகனில் யூபிஎஸ்ஆரும், பிடி 3 தேர்வுகளும அகற்றப்பட்டது தொடர்பிலான முடிவிலிருந்து
பின்வாங்கப்படாது என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தேசிய கல்வித்
தத்துவத்தை வழிநடத்துவதில் இனியும் பொருந்தாது என்று இவ்விரு தேர்வுகளும்
வருணிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
மீண்டும்
தொடர்வதற்கு பொருத்தமற்றவை என்பதன் காரணத்தினால், யூபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள்
அகற்றப்பட்ட முடிவை நிலைநாட்டுவதன் மூலம், இப்போதைக்கு நாங்கள் அம்முடிவை மாற்றிக் கொள்ள மாட்டோம்
என்பதை வலியுறுத்த இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
அதற்கு மாறாக,
சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்காகப் பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டிற்கு (பிபிஎஸ்)
நாங்கள் இடமளிக்கின்றோம். கல்வித் துறையில் எது நடந்தாலும் தேசிய கல்வித் தத்துவத்திற்கு திரும்ப
வேண்டும் என்று ஃபட்லினா
தெரிவித்தார்.
மக்களவையில்
நேற்று திங்கள்கிழமை 2025ஆம் ஆண்டு
கொள்கை மட்டத்திலான விநியோகச் சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தை நிறைவு செய்து
பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
யூபிஎஸ்ஆர்
மற்றும் பிடி3 தேர்வுகளைத்
திரும்பவும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாக கல்வி அமைச்சைக்
கேட்டுக் கொண்டிருந்தனர். யூபிஎஸ்ஆர்
தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு
முதலும், பிடி3 தேர்வு 2022ஆம் ஆண்டு
முதலும் அகற்றப்பட்டிருந்தன. அதன் பின்னர் கல்வி அமைச்சு, பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டுத் தேர்வு மீது
கவனம் செலுத்தத் தொடங்கியது. அதில்,
வகுப்பறை மதிப்பீடு, தேகப் பயிற்சி நடவடிக்கை மதிப்பீடு, விளையாட்டு மற்றும் புறப்பாடமும் சம்பந்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், யூபிஎஸ்ஆர் தேர்வைத் திரும்பக் கொண்டு வருவதில்லை என்று கல்வி அமைச்சு முடிவெடுத்துவிட்ட போதிலும், அத்தேர்வு திரும்பவும் நடத்தப்பட வேண்டும் என்று அதிகமானோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்விரு தேர்வுகளும் அகற்றப்பட்டுவிட்ட போதிலும், மாணவர்களை மதிப்பீடு செய்வதற்காக தேர்வுகள் ஏதும் இனி இருக்காது என்று அர்த்தமாகாது என்று ஃபட்லினா விளக்கினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *