செய்தித்தாள் பக்கத்தின் கீழ் 4 வண்ண வட்டங்கள் இருப்பது ஏன்?

- Muthu Kumar
- 17 Dec, 2024
டிஜிட்டல் யுகத்தில் செய்தித்தாள் வாசிப்பு என்பது இன்னும் பலரது விருப்பமாக இருந்து வருகிறது. கைத்தொலைபேசியில் ஏராளமான செய்திகள் இலவசமாக கிடைத்தாலும் ஒரு தரப்பினருக்கு செய்தித் தாள்களில் செய்தியை படித்தது போன்ற திருப்தி கிடைப்பது இல்லை.
இதற்காக அவர்கள் காலையில் செய்தித்தாள் எப்போது கடைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. செய்தித்தாள்களுக்கும் இது பொருந்தும். இருப்பினும் இன்றைய சூழலில் செய்தித்தாள் வாசிப்பது ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் அன்றாடம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
செய்தித்தாளை நன்றாக பார்த்தால் ஒவ்வொரு பக்கத்தின் கீழும் 4 வண்ணங்களில் வட்டங்கள் இருக்கும். இந்த வட்டங்கள் எதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நீங்கள் யோசித்தது உண்டா?
முதன்மை நிறங்கள் என்று கூறப்படும் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களை மற்ற எந்த ஒரு நிறங்களை கலந்து உருவாக்க முடியாது. இதற்காகத்தான் அவை முதன்மை நிறங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
செய்தித்தாள்களில் உள்ள நான்கு வண்ண வட்டங்கள் CMYK மாதிரியைக் காட்டுகின்றன, அங்கு 'C' என்பது சியான் (நீலம்), 'M' என்பது மெஜந்தா, 'Y' என்பது மஞ்சள் மற்றும் 'K' என்பது கருப்பு.
செய்தித்தாள்களில் வண்ணமயமான படங்கள் மற்றும் தலைப்புச் செய்திகளைக் கொடுக்கும் போது CMYK வண்ணங்களில் அச்சிடுவது முக்கியமானதாகும். செய்தித்தாள்கள் அச்சிடும்போது, 4 வண்ணங்களில் ஒவ்வொன்றையும் குறிக்க தனித்தனி தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
கூர்மையான மற்றும் நேர்த்தியான படங்களைப் பெறுவதற்கு இந்த தட்டுகளின் சீரமைப்பு முக்கியமானது. சீரமைப்பு சரியாக இல்லாவிட்டால், அது ஒரு மங்கலான படத்தை உருவாக்கும். இந்த 4 வண்ணங்கள் ஒவ்வொன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதை குறிப்பிடும் வகையில், செய்தித் தாளின் கீழே சிறிய வண்ண வட்டங்கள் அச்சிடப்படுகின்றன.
இந்த மாடலானது செய்தித்தாள்களுக்கு மட்டுமின்றி புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் வெளியீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. ஈகிள் பிரிண்டிங் நிறுவனம் CMYK மாடலை 1906 இல் அறிமுகப்படுத்தியது, அதன் பின்னர் இது ஒரு நிலையான நடைமுறையாக மாறியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *