வாகனங்களில் செல்லும் நம்மில் பலரை நாய்கள் விரட்டும் காரணம் என்ன?

top-news
FREE WEBSITE AD

வீதிகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாய் கார்களை அல்லது பைக்குகளை குறி வைத்து நீண்ட தூரம் துரத்தி செல்வதை அனைவருமே பார்த்திருக்க கூடும்.அவை ஏன் அவ்வாறு செய்கின்றன என்பது குறித்து சிந்தனைப் பூங்காவில் காண்போம்.

பொதுவாக இரவு நேரங்களில் நகர் புறங்களில் வீதியில் இருக்கும் நாய்களின் அட்டகாசம் சற்று எல்லை மீறியதாகவே காணப்படுகின்றது.குறிப்பாக இரவில் வெளியில் செல்வததை நாய்களுக்கு பயந்து புறக்கணிப்பவர்களும் இருக்கின்றார்கள்.
அப்படி பல நேரங்களில் நாய்கள் வீதியில் செல்லும் ஒரு சில வாகனங்களை நீண்ட தூரம் வெறியோடு துரத்துவதை பார்த்திருப்போம். அதற்கு என்ன காரணம் என்று யோசித்து இருக்கின்றீர்களா?

பெரும்பாலானவர்கள் இதனை நாய்கள் விளையாட்டாக செய்கின்றது என நினைக்கின்றார்கள். சில வாகன ஓட்டுநர்கள் நாய் துரத்துவதால் வாகனத்தை இன்னும் வேகமாக ஓட்ட முயற்சிக்கின்றனர். அதனால் வாகன விபத்துகள் அதிகரிப்பதுடன் நாய்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரிக்கின்றது.

நாய்களுக்கு இயல்பாகவே வேட்டை குணம் அதிகம் இருப்பதால், வாகனத்தின் வேகத்தை அதிகரித்தால் அது தங்களின் இரையை துரத்துவதாக நினைத்து இன்னும் கோபத்துடன் துரத்த ஆரம்பிக்கும்.நாய்கள் உண்மையில் வாகனத்தை துரத்தி செல்வதற்கு காரணம் என்னவென்றால், அவை ஒரு அசாதாரண வாசனை உணர்வைக் கொண்டுள்ளன.

வீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் டயர்களில் சில நாய்கள் சிறுநீர் கழிப்பதை பார்திருப்பீர்கள் அந்த சிறுநீரின் வாசனை டயர்களில் நீண்ட நேரம் இருக்கும்.

எனவே நீங்கள் சாலையில் செல்லும் போது, வேறு நாய்கள் இந்த வாசனையைக் கண்டால் மற்ற நாய்கள் அருகில் இருப்பதாக நினைத்தே வாகனத்தை துரத்தி செல்கின்றது.

பொதுவாக வேறு பிரதேசத்தில் இருக்கும் நாய்கள் தங்களின் பிரதேசத்துக்குள் வருவதை நாய்கள் விரும்புவது கிடையாது. எனவே தான் இவ்வாறு விரட்டி செல்கின்றது.இனிமேல் உங்கள் வாகனத்தை நாய்கள் துரத்தினால் வேகமாக செல்லாமல் மெதுவாக அங்கிருந்து சென்றாலே நாய் நம்மை துரத்துவதை நிறுத்திவிடும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *