அரிசியில் வண்டுகள் வராமல் தடுக்க சிக வழிகள்!

top-news
FREE WEBSITE AD

வீட்டில் அரிசி இருந்தாலே சில நாட்களில் அதில் வண்டு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.குறிப்பாக மூட்டைகளில் சேமிக்கப்படும் அரிசியை வண்டு மற்றும் ஈரப்பதத்தில் இருந்து காப்பாற்றுவதே இல்லத்தரசிகளுக்கு பெரும் வேலை அதனை சின்னஞ்சிறு குறிப்புகள் மூலம் விரட்டி அடிப்பது எப்படி என்று தகவல் வழி அறியலாம்…

இந்தியர்களின் முக்கிய உணவாக அரிசி உள்ளது அதனால் ஒவ்வொரு வீட்டிலும் அரிசி மூட்டைகள் குவிந்து கிடைக்கின்றன இதனால் அரிசியில் பூச்சி தாக்குதல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது ஒரு வண்டு அரிசிக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான வண்டுகளையும் புழுக்களையும் உருவாக்கும்..

இதனால் அரிசி முழுவதும் கெட்டுவிடும் அவற்றை விரட்டியடிக்க மணிக்கணக்கில் செலவழிக்க வேண்டும்.எனவே அரிசியில் பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது..

பூச்சிகள் வராமல் தடுக்க,அரிசி மூட்டையை திறக்கும் போது அரிசிக்குள் பூச்சிகள் வராமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரிசியை சேகரித்து வைக்கக்கூடிய மூட்டை அல்லது டப்பாவில் சில பிரியாணி இலைகளை போட்டு வைக்கலாம். பிரியாணி இலைகள் ஆரோக்கியத்திற்கும் நல்லது தற்செயலாக சாப்பிட்டாலும் பிரச்சனை இல்லை அது மிகவும் எளிமையான தீர்வு..

கிராம்பு இருக்க பயம் எதற்கு:இயற்கை கிராம்பு வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. எனவே அரிசி பையில் கிராம்புகளை எடுத்து கலக்கவும் மேலும் கிராம்பு சேர்த்த பிறகு அரிசி பையை திறக்காமல் இறுக்கமாக கட்ட வேண்டும் அந்த கார வாசனை அரிசியுடன் கலந்து விடும் இதனால் பூச்சி உள்ளே நுழைவதை தடுக்கவும் முடியும்..

பூண்டு மற்றும் கிராம்பு ; பூண்டு பற்கள் அரிசியில் தொற்று ஏற்படாமல் தடுக்கின்றன ஏனெனில் பூண்டு கிருமி நாசினியாக செயல்படுகிறது தோல் நீக்கப்பட்ட பூண்டுடன் கிராம்புகளை சேர்க்கவும் ஏனெனில் பூண்டின் தோல் அகற்றப்படாவிட்டால் கடுமையான வாசனை அரிசியில் ஒட்டிக்கொண்டு போகாது..

புதினா இலை ; புதினா இலையை உலர்த்தி பொடி செய்து அதனை அரிசியுடன் கலந்தால் அரிசியில் பூச்சி மற்றும் பூச்சி சம்பந்தப்பட்ட தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும் புதினா ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை அரிசியுடன் கலந்து சமைத்தாலும் பிரச்சனை இருக்காது.. இதேபோல் வேப்ப இலைகள் அரிசியை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் இந்த வேப்ப இலைகளையும் உலர்த்தி பொடியாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடுவார்கள் ஆனால் சமைக்கும்போது அரிசியை சுத்தம் செய்யவில்லை என்றால் வேம்பு அரிசியில் கசப்பை சேர்க்கும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *