மனிதர்கள் குத்திக் கொள்ளும் டாட்டூக்கள் ( TATTOOS) பற்றிய தகவல்கள்!
- Muthu Kumar
- 11 May, 2024
பழமையான கலைகளில் ஒன்று பச்சைக் குத்துதல் எனப்படும் டாட்டூக்கள். இந்த டாட்டூக்கள் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிறிய அளவில் தொடங்கி தற்போது உடல் முழுவதும் டாட்டூக்களை குத்தும் பழக்கம் தொடங்கியுள்ளது.
நரிக்குறவர்கள் மட்டுமே பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது நிறைய நவீன கருவிகள் மூலம் டாட்டூ குத்தப்பட்டு வருகிறது. இந்த டாட்டுக்களுக்கு பயன்படுத்தும் நிறமிகள் நம் தோலில் ஊடுருவி செல்வதால் இதை கைதேர்ந்த கலைஞர்களிடம் மட்டுமே குத்தி கொள்ள வேண்டும்.
விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக பயிற்சி இல்லாத நபர்களிடம் குத்தும் போது அதன் மூலம் ஆபத்துகள் அதிகம் உள்ளது.சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். டாட்டூக்களை குத்துவதற்கு என பயிற்சிகள் உள்ளன. அவற்றை பலர் படித்துவிட்டு டாட்டூ தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அது போல் டாட்டூ குத்த வருவோரிடம் உடனே இழுத்து பிடித்து குத்தி விடாமல் வாடிக்கையாளர்களிடம் டாட்டூக்கள் எப்படி குத்தப்படும் என்பது தொடர்பான காணொளியை வாடிக்கையாளருக்கு போட்டு காண்பித்துவிட்டு அவர்கள் சரி என சொன்னதும்தான் போடுகிறார்களாம். அவர்களிடம் இருக்கும் மைகளும் தரமானவை. அது போல் ஒரு முறை மட்டுமே அந்த மையை பயன்படுத்துவார்கள்.
டாட்டுக்களை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஊசியானது குத்தும் இடத்தில் ஒரு வினாடிக்கு 200 முறை வைப்ரேட் ஆகிறது.ஒரு டாட்டு போடுவதற்கு சிறிய அளவிலான ஏராளமான ஊசிகள் உங்கள் தோலில் குத்தப்படுகிறது. ஒரு வினாடிக்கு 200 முறை அந்த ஊசிகள் குத்தப்படுகின்றன. டாட்டுக்கள் போட்ட பிறகு உங்கள் தோல் பயங்கரமாக இருக்கும்.
முதலில் டாட்டு போடும் இடம் முடிகள் எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு தோலில் நீங்கள் விரும்பும் டிசைன் பிரின்ட் எடுத்து ஒட்டப்படுகிறது. பிறகு ஒரு கருவி மூலம் அந்த டிசைனின் அவுட்லைன் வரையப்படுகிறது.
இவை எல்லாம் செய்து முடித்தவுடன் உங்கள் தோலில் மெல்லிய ஊசிகள் துளைக்கின்றன. ஒரு சிறிய டிசைன் வரைய வேண்டுமானாலும் கூட நிறைய முறை ஊசியை குத்தி குத்தி எடுக்க வேண்டியது இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரானவை டாட்டுக்கள். வண்ண மைகளில் உள்ள பிக்மென்ட்கள் தோலின் லேயரை துளைக்கின்றன. இந்த நேரத்தில்தான் நோய் எதிர்ப்பு மண்டலமானது இந்த நிறமிகளின் மூலக்கூறுகளை அடையாளம் காணத் தொடங்குகின்றன.
நிறமிகளை கிருமிகள் என கண்டறிகிறது. அந்த மைகளின் மீது தாக்குதல் நடத்த நோய் எதிர்ப்பு செல்கள் தொடங்குகின்றன. நோய் எதிர்ப்பு செல்கள் அதிகமாக இருக்கும் போதிலும் மிகவும் சிறியதாக இருப்பதால் நிறமியின் மூலக்கூறுகளை எதிர்த்து செயல்பட முடியாமல் போகிறது.
இதனால்தான் டாட்டுக்களை முழுவதுமாக நீக்குவது என்பது மிகவும் கடினமானது. உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த டிசைன் உங்களுடனேயே பயணிக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *