மூங்கில் உப்பு (Korean bamboo salt) என்று அழைக்கப்படும் கொரியன் சால்ட் !

- Muthu Kumar
- 28 Jan, 2025
உலகிலேயே கொரியா நாட்டைச் சேர்ந்த மூங்கில் உப்பு (Korean bamboo salt) என்று அழைக்கப்படும் கொரியன் சால்ட் என்ற உப்பு தான் உலகில் மிக விலையுயர்ந்த உப்பு ஆகும்.
இது கொரிய உணவுகளை சமைப்பதற்கும் பாரம்பரிய கொரிய மருத்துவத்தில் ஒரு தீர்வாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்த உப்பு உடலில் பல நோய்களையும் தீர்ப்பதாக நம்பப்படுகிறது.
ஆனால் கொரிய மூங்கில் உப்பு ஏன் மிகவும் விலை உயர்ந்தது என்பதற்கான பதில்கள் அது தயாரிக்கப்படும் விதத்தில் உள்ளது. இது மிகவும் சிக்கலான செயல்முறையாகும்.
ஒரு தடிமனான மூங்கில் தண்டுகளில் கடல் உப்பை அடைத்து, பைன் விறகுகளைப் பயன்படுத்தி 9 முறை மிக உயர்ந்த வெப்பநிலை வைத்து இதனை பதப்படுத்துகிறார்கள் முதலில் சாதாரண உப்பு மூங்கில் கட்டைகளுக்குள் வைக்கப்பட்டு மஞ்சள் நிற களிமண்ணால் மூடப்படுகிறது.
பின்னர், இந்த மூங்கில் கட்டைகளை அதிக வெப்ப நிலையில் வைக்கிறார்கள். அப்போது, உள்ளே இருக்கும் உப்பின் தன்மை மாறுபாடு அடையும். இந்த செயல்முறையை 9 தடவை செய்கிறார்கள்.
இதில், இறுதி நிலையான ஒன்பதாவது முறை சூடேற்றம் செய்யும் வெப்பநிலை1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் செயல்படுகிறது.
இந்த செயல்முறை நிறைவு பெற்ற பின்னர் மூங்கில் உப்பு பல்வேறு வண்ணங்களாக மாற்றமடைகிறது. இந்த செயல்முறை முடிந்ததும், மூங்கில் உப்பில் நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு படிகங்கள் இருக்கும்.
மேலும் காம்ரோஜங் சுவை என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான இனிப்பு உள்ளது. ஏனெனில் உப்பு செயல்முறையின் போது மூங்கிலின் சுவையை உறிஞ்சிவிடும்.
"ஊதா மூங்கில் உப்பு" என்று அழைக்கப்படும் நன்கு சுடப்பட்ட மூங்கில் உப்பு, ஒரு தனித்துவமான ஊதா நிறத்தைக் கொண்டுள்ளது. இது 1,500 °C வெப்பநிலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த முழு செயல்முறையை முடிக்க 50 நாடுகளுக்கு மேல் ஆகின்றது. இந்த மூங்கில் உப்பு உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் தனி உப்பு உலைகளை இயக்குவதற்கு திறமையான பணியாளர்களை கொண்டுதான் இயக்க முடியுமாம்...
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *