4 வயதில் 5 உலகச் சாதனைகள்! இளம் சாதனைத் தேவி தேவிஷா!
- Thina S
- 02 Oct, 2024
அண்மையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் 4 வயது சிறுமியை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அவர் தான் மலேசியாவின் இளம் சாதனைத் தேவி தேவிஷா. மலேசியாவில் இளம் சாதனையாளர்களின் வளர்ச்சி வியக்கும் நிலையில் இருந்து வரும் நிலையில், குழந்தைகளின் சாதனை வியப்பிலும் பெரும் வியப்பில் நம்மை ஆழ்த்துகிறது.
2019 அக்தோபர் 2'இல் டத்தோ விக்னேஷ்வரன் இராமசாமி டத்தின் ஷாமளா முனியாண்டி தம்பதியருக்குப் பிறந்த தேவிஷா தனது 4 வயதிலேயே 5 உலகச் சாதனையைப் புரிந்து நாட்டின் இளம் சாதனையாளராக வளம் வருகிறார். ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் பாலர்பள்ளி மாணவராக இருக்கும் இவரின் சாதனைகளுக்குப் பெற்றோர்களான டத்தோ விக்னேஷ்வரன் இராமசாமி டத்தின் ஷாமளா முனியாண்டி அவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மேலும் வியப்புக்குரியது. தேவிஷா பிறந்ததும் தனது ஆசிரியர் பணியிலிருந்து முன் ஓய்வுப் பெற்று முழுமையாகத் தன் அரவணைப்பில் தேவிஷாவை வளர்த்து வந்துள்ளார் அவரின் தாயார் டத்தின் ஷாமளா முனியாண்டி.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் தேவிஷாவுக்குப் படித்த புத்தகம் குறித்து குறிப்புகள் எடுக்கும் பழக்கத்தின் மூலமாக் முழுமையாகப் புத்தகம் வாசிப்பதைத் தன் பொழுது போக்காகப் பழிகியுள்ளார் தேவிஷா.
தேவிஷாவின் சாதனைகள் - 2023
- 2023 இல் 51 ஆசிய நாடுகளின் பெயர்களை 38.11 வினாடிகளில்
கூறி மலேசியச் சாதனைப் புத்தகத்தில்
இடம்பிடித்துள்ளார்.
- மலேசிய இளம் சாதனையாளர்களின் பட்டியலில் தேர்வு.
- 28 வினாடிகளில் ஐரோப்பிய நாடுகளின் பட்டியலைக் கூறி, கலாம்
அனைத்துலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்
- நேதாஜி அனைத்துலகச் சாதனையாளரின் கிராண்ட் மாஸ்டர்
விருது.
- அமேரிக்க சூப்பர் க்ராஸ்பிங்கின் மிகுந்த இளம்
சிந்தனையாளர் விருது.
- ஆசிய ஐரோப்பியாவின் 85 பிரதமர்களின் பெயர்களை மனனம்
செய்து சாதனை.
- அனைத்துலகக் காங்கிரசின் இளம் சாதனையாளர் விருது
- ஆசியாவின் மிளிரும் சாதனையாளர்களில் இரண்டாம் நிலை.
தேவிஷாவின் சாதனைகள் - 2024
- கிட்ஸ் கோட் டேலண்ட் நிகழ்ச்சியில் தங்க விருது.
- கலர்ஸ் ஃப் இந்தியாவின் வண்ணம் தீட்டும் போட்டியில்
அனைத்துலக அளவில் மூன்றாம் நிலை.
- ஆசியா கோட் டேலண்ட் நிகழ்ச்சியில் ஆசியாவிலேயே இளம்
பங்கேற்பாளராகத் தேர்வுப் பெற்ற முதல் நபர் தேவிஷா.
5 உலகச் சாதனை
விருதுகள்
- அமேசிங் மலேசியா சாதனை புத்தகத்தின் சாதனையாளர் விருது
- பிரிட்டிஷ் அனைத்துலகச் சாதனை புத்தகத்தின் சாதனையாளர்
விருது
- ஆசியான் அளவிலான சாதனையாளர் விருது
- சாம்பியன் வோர்ல்ட் சாதனை புத்தகத்தின் சாதனையாளர்
விருது.
- உலகச் சாதனைப் புத்தகத்திற்காக 100 உலகத் தலைவர்களின்
பெயரை 3 நிமிடங்கள் 46 வினாடிகளில் கூறி உலகச் சாதனையாளர் விருது.
இத்துணை சாதனைகளைத் தன் குழந்தைப் பருவத்தில் செய்திருக்கும் தேவிஷா, தற்போது தனது பாலர்பள்ளிக் கல்வியைச் சிரம்பானில் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் பயில்கிறார். சாதனையாளர்களை உருவாக்கிய தமிழ்ப்பள்ளிகள் தற்போது சாதனையாளர்களை வரவேற்கிறது. தேவிஷாவின் சாதனைச் சுவடுகளில் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியும் இனி இடம்பெறும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *