கெளானாங் கடற்கரைப் பகுதியில் மோசமான கடல் கொந்தளிப்பால் கடல் நீர் பெருக்கெடுத்து ஓட்டம்!
- Muthu Kumar
- 18 Oct, 2024
(எஸ்.எஸ்.மணிமாறன்) பந்திங், அக்.18-
மோசமான கடல் கொந்தளிப்பால் கெளானாங் கடலோரச் சாலைகளில், அருகில் உள்ள வீடுகளில் கடல் நீர் பெருக்கெடுத்து ஓடியதாக கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் ஸ்குவாட் பந்தாஸ் அவசர நடவடிக்கைக் குழு அதிகாரி நோர் ஹிஷாம் ஒஸ்மான் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் நான்கு பேர் அடங்கிய குழுவினருடன் கெளானங் கடற்கரைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட வேளையில் கடல் அலைகள் 5.7 மீட்டர் வரை உயர்ந்து அதிக சீற்றத்துடன் காணப்பட்டதாக அவர் கூறினார்.
கெளானாங் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாமான் ஹார்மோனி மக்கள் குடியிருப்பு ப் பகுதியில் ஏறிய கடல் பெருக்கு இன்னும் வடியாமல் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.இக்குடியிருப்புப் பகுதியை ஒட்டியுள்ள கால்வாய்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் அதன் நீரோட்டம் தடைப்பட்டு நிற்பதாக நோர்ஹிஷாம் கூறினார். இது குறித்து, உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட வடிகால் நீர்ப்பாசன இலாகாவுக்கு புகார் அளிக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *