ஜாஹிட் மன்னிப்புக் கேட்க வேண்டும்! - மகாதீர்

- Shan Siva
- 25 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 25: கட்சி சொத்துக்கள் தொடர்பான தனது அறங்காவலர்
பொறுப்புகளை விடுவிப்பதற்கான ஆவணங்களில் கையெழுத்திட தாம் மறுத்ததாகக் கூறியதற்காக, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தன்னிடம் மன்னிப்புக் கேட்க
வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜாஹிட்டின் அத்தகைய
கூற்று பொய்யானது என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
ஏழு
நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை
எடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று மகாதிரின் வழக்கறிஞர் ரஃபீக் ரஷீத் ஓர்
அறிக்கையில் தெரிவித்தார்.
இன்று முன்னதாக,
மகாதிர் ஆவணங்களில் கையெழுத்திட மறுத்ததாகக்
குற்றம் சாட்டுவதை ஜாஹித் மறுத்தார். மேலும், முன்னாள்
தலைவரின் பெயரை ஒருபோதும் குறிப்பிடவில்லை என்று கூறினார்.
ஒரு நிருபர் தன்னிடம் கேட்டபோது, ஒரு தனிநபரை மட்டுமே தாம் சொன்னதாக தாப்பாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
Tun Mahathir meminta Ahmad Zahid Hamidi memohon maaf dalam tempoh tujuh hari berhubung tuduhan palsu mengenai penolakan menandatangani dokumen. Jika gagal, tindakan undang-undang akan diambil, menurut peguam Mahathir. Zahid menafikan tuduhan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *