சனிப்பெயர்ச்சியினால் 30 ஆண்டுகள் கழித்து துலாமிற்கு ராஜயோகம்!

top-news
FREE WEBSITE AD

2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் யோகம் வரப் போகிறது. சிம்ம ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்க்கும் சனிப்பெயர்ச்சி வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறப் போகிறது. கும்பம் வீட்டில் இருக்கும் சனி மீனம் வீட்டிற்கு மாறுகிறார். பொதுவாக குருவின் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் 12 ராசிகளுக்கும் பெரிதளவில் கெடுபலன்களை தர மாட்டார். 3, 6, 11 ஆம் இடங்களில் இருக்கும் சனி பகவான் மிகப்பெரிய யோக பலன்களைச் செய்வார். சிலருக்கு மட்டுமே சாதகமற்ற நிலை இருக்கும்.

ஏழரை சனியில் கூட அனைவருக்கும் பிரச்சனை ஏற்படாது. கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.

நம்முடைய ஜாதகத்தில் 4 வீட்டை சனி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சனி ஒரு வீட்டில் இருக்கும் அந்த வீட்டு பலன்கள் சனி பகவானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 3, 7, 10 பார்வைகள் மூலமாக இன்னொரு 3 வீட்டை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த இரண்டரை காலம் சனிப்பெயர்ச்சியின் தாக்கமே அதிகளவில் இருக்கும்

2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார்.அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் யோக பலன்களை 100 சதவீதம் பெறப் போகிறவர்கள் துலாம் ராசியினர். 6 ஆம் இடத்தில் சனி வருவதால் தொட்டதெல்லாம் துலங்கும் யோகம் கிடைக்கும். எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு அபாரமான நன்மைகள் நடக்கக்கூடிய அமைப்பு இப்போது உள்ளது. 100 மார்க் துலாம் ராசிகளுக்கு கொடுக்கலாம். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உங்களை யாராலும் அசைக்க முடியாது. கோச்சாரத்தில் இதுபோன்ற அமைப்பு பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும். இந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவானால் நல்ல பலன்களை அனுபவகிக்க கூடியதில் ரிஷபம், துலாம், மகரம் ஆகிய மூன்று ராசிகள் மட்டுமே யோக பலன்களை அனுபவிக்கப் போகின்றன.

மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சியில் 6 ஆம் இடத்துக்கு சனி வருவது அபாரமான யோக நன்மைகள், பெருத்த தன லாபத்தை, வியாபார நன்மை, தொழில் நன்மை, தொழில் நன்மை, மாற்றத்தை, முன்னேற்றத்தை, ஏற்றத்தை அத்தனையையும் கொடுக்க கூடிய அமைப்பு உள்ளது. 40 நாட்களில் மே 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதனால், குரு ராசியைப் பார்க்கக்கூடிய அமைப்பு ஏற்படப் போகிறது. அந்தஸ்து, கெளரவம், பாக்கியம், திருமணம், பிள்ளைகள் படிப்பு, நினைத்தது நடக்கக்கூடிய அமைப்பு உண்டாகப் போகிறது.

அதைத்தொடர்ந்து, ராகு கேது பெயர்ச்சியில் 11 ஆம் இடத்தில் கேது வந்துவிடுவார். வெற்றிகளைத் தரக்கூடிய அமைப்பாக இருக்கும். சட்டப் போராட்டம், நல்ல நிலை, மிகப்பெரிய அளவில் பங்குச்சந்தை போன்றவற்றில் லாபம் கிடைக்காதவர்கள், குடும்பத்தில் நிம்மதி இழந்தவர்கள், சூதில் பணத்தை இழந்தவர்களுக்கு இழந்த பணம் திரும்ப கிடைக்கும். நல்லவைகள் நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

எல்லாமே நிறைவாக இருக்கக்கூடிய அமைப்பு துலாம் ராசிக்காரர்களுக்கு வந்துவிடும், அதன்படி, சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேதுப் பெயர்ச்சி ஆகிய அனைத்தும் யோக பலன்களைத் தரும். 6 ஆம் இடத்தில் இருக்கும் சனி அபரிமிதமான நல்ல லாபத்தை தரும், கடன், நோய், எதிரிகளை தீர்ப்பார். ஜெயிக்க முடியாதவர்களை ஜெயிக்க வைப்பார். காதல் திருமணத்தில் முடியும் யோகம் உண்டாகும். புதிய அறிமுகம் உண்டாகும். காதல் வரும். வாழ்க்கை துணையை அடையும் அமைப்பு, பிரிந்த கணவன் மனைவி சேரும் அமைப்பு.

வீடு கட்டும் வாங்கும் விற்கும் யோக அமைப்பு, கணவன் மனைவி சேர்ந்து சம்பாதித்து முன்னேறும் யோகம் என அனைத்துவிதமான நன்மைகளும் துலாம் ராசிக்காரர்களுக்குத் தான் கிடைக்கப் போகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *