சிசுவைக் கொன்ற குற்றத்தில் இங்கிலாந்தில் மலேசிய மாணவிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

top-news
FREE WEBSITE AD

 பெட்டாலிங் ஜெயா, அக் 26:

பிறந்த குழந்தையை கொன்ற குற்றத்திற்காக இங்கிலாந்தில் மலேசிய மாணவிக்கு குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் பிறந்த சிறிது நேரத்திலேயே சம்பந்தப்பட்ட அந்த மாணவி குழந்தையை தானியப் பெட்டியில் வைத்து சூட்கேஸில் மறைத்து வைத்ததாக புகார் எழுந்ததையடுத்து இந்த வழக்கு பலரது கவனத்தை ஈர்த்தது.

குழந்தை "பிறந்த பிறகு உயிருடன் இருந்தது, உயிர் பிழைத்திருக்கலாம், ஆனால் ஜியா சின் தியோ என்ற அம்மாணவி அக்குழந்தையை ஒரு தானியப் பெட்டிக்குள் வைக்க முடிவு செய்தார்" என்று UK Crown Prosecution Service (CPS) கூறியது.22 வயதான தியோ மீது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) வார்விக் கிரவுன் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட் அந்த கொலைக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தண்டனை பெற்றார்.வியாழன் அன்று நீதிமன்றம் அவளைக் குற்றவாளி என அறிவித்தது.

கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து வந்த மலேசிய மாணவியான தியோ, தனது கர்ப்பத்தை மறைத்து மார்ச் 4 அன்று பிரசவித்தார்.பின்னர் அவர் தனது பிறந்த குழந்தையை ஒரு தானிய பெட்டியில் வைத்தார், அதை அவர் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து ஒரு சூட்கேஸில் மறைத்து வைத்து இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார்.இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசார் குழந்தையை கண்டுபிடித்தனர், அதற்குள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *