பந்தாய் ரெமிஸ் தீயணைப்பு வீரர்கள் சிக்கிக் கொண்ட குழந்தையின் வலது கையை காப்பாற்றினர்!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

ஈப்போ, அக்.18-

இங்குள்ள பந்தாய் ரெமிஸ் கடற்கரை பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஒரு மளிகைக் கடையில் வைக்கப்பட்டிருந்த விளையாட்டு பிளாஸ்டிக் முட்டைகளை உள்ளடக்கிய இயந்திரத்தில் அந்த இரண்டு வயது குழந்தை தனது வலது கையை உள்ளே நுழைத்துள்ளது. மீண்டும் கையை வெளியே எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,அந்த குழந்தையின் கையை வெளியே எடுக்க அவருடைய தாயார் முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. குழந்தையும் வலியால் துடிக்கவில்லை. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் துரித சாதுரியமான முறையைக் கையாண்டு குழந்தையின் கையை பாதுகாப்பாக அந்த இயந்திரத்திலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.

நடந்த இச்சம்பவம் குறித்து பேரா மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துணை இயக்குநர் சபரோட்ஷி நோர் அகமது, சம்பவத்தன்று கடமையில் ஈடுபட்டிருந்த பந்தாய் ரெமிஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றுகூறப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது என்றும், அன்றிரவு 7.15 மணிக்கு இந்த நடவடிக்கை ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்றும் மாநில தீயணைப்பு துணை இயக்குநர் சபரோட்ஷி சொன்னார். பெற்றோர்கள் குழந்தைகளை வணிகத் தலங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என மேற்பார்வை செலுத்தினால் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *