வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நுழைய முகவராகச் செயல்பட்ட வங்காளதேச நபர் கைது!

top-news
FREE WEBSITE AD

பட்டர்வொர்த், அக் 24:

பினாங்கு சர்வதேச விமான நிலையத்தில் (PIA) சிறப்பு கவுன்ட்டர் மூலம் வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நுழைய ஏற்பாடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர், இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டார்.

35 வயதான அலிஃப் கான், நீதிபதி சுல்ஹாஸ்மி அப்துல்லா முன் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டின் விசாரணையை கோரினார்.
அக்டோபர் 17 ஆம் தேதி இரவு 9.20 மணி முதல் 9.45 மணி வரை ஜாலான் பினாங்கில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே குடிநுழைவு தடுப்புப்பட்டியலில் இருந்து தனது பெயரை அகற்ற உதவுவதற்காக இந்தோனேசிய எண்டாங் ரிஸ்டாவதியிடம் இருந்து அலிஃப் RM2,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்தக் குற்றத்திற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஐந்து மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.குற்றம் சாட்டப்பட்டவர் குடிமகன் அல்லாதவர் என்பதால் ஜாமீன் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..இந்தோனேசியப் பிரஜை ஒருவரை தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் நுழைவதற்கு வசதியாக, முகவராகச் செயல்பட்ட வங்காளதேச நபருடன் அமலாக்க அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்ததாக நம்பப்படுவதாக ஆதாரங்கள் தெரிவித்தன!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *