சரவாக் ரெகாட்டா படகுப் பயிற்சிப் போட்டியின்போது ஐவர் பலி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 21-

கூச்சிங் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "சரவாக் ரெகாட்டா படகுப் பயிற்சிப் போட்டியின்போது படகு ஒன்று கவிழ்ந்ததில் ஐவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.அவர்கள் அனைவரின் உடல்களும் நேற்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டன என்று சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பணியாளர் ஒருவர் குறிப்பிட்டார். அந்த உடல்கள் அனைத்தும் காலை 6.16மணிக்கும் 7.09 மணிக்கும் இடையில் கண்டுபிடிக்கப்பட்டன.

போலீசாரும் சுகாதார அமைச்சும் உறுதிசெய்த பிறகு அவரவர் குடும்பத்தினருடன் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.இக்மால் சாமாயில், மாஜூரி மஹாருப், ஆஃபிக் இஷ்யாமுடின் அசாரி, கைருல் பிடின், கைருல் ஹிஷ்யாம் கஸ்தூரி ஆகியோரே அந்த ஐவர் ஆவர்கள். அவர்கள் இருபத்திரண்டு வயதுக்கும் முப்பத்தைந்து வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.

அப்படகில் மொத்தம் 16 பேர் இருந்தனர். அவர்களுள் பதினோரு பேர் உயிர் தப்பிய வேளையில், ஐவரின் நிலைமை தெரியாமல் இருந்தது.அந்த ஐவரும் சரவாக் பாதுகாப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் ஊழியர்கள் ஆவர். அப்பிரிவு சரவாக் முதலமைச்சர் இலாகாவின்கீழ் செயல்படுகிறது.“சரவாக் ரெகாட்டா” படகுப் போட்டியும் கூச்சிங் கடலியல் விழாவும் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *