ஆயர் கூனிங் இடைத் தேர்தல் பாரிசான் அபார வெற்றி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 26: ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வேட்பாளர் யுஸ்ரி பக்கீர் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாப்பாவில் உள்ள டேவான் மெர்டேகாவில் உள்ள அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வேளையில் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் வெளியாகியுள்ளன.

முடிவுகளின் அடிப்படையில் பாரிசன் நேஷனலின் அம்னோ வேட்பாளர் யூஸ்ரி பக்கீர் 11,065  வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிகாத்தான் நேஷனல் (PN) இன் அப்துல் முஹைமின் மாலேக் 6,059 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் பார்ட்டி சோசியாலிஸ் மலேசியா (PSM) இன் பவானி  1,106  வாக்குகளைப் பெற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் முகமது யுஸ்ரி பக்கீர் 5006 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் 2,213 வாக்குகள் பெரும்பான்மையில் ஐந்து முனைப் போட்டியில் அம்னோவைச் சேர்ந்த இஷாம் ஷாருதீன் வெற்றி பெற்றிருந்தார். இம்ம்முறை  அதைவிட அதிகப் பெரும்பான்மையில் அம்னோ அத்தொகுதியைக் கைப்பற்றியுள்ளது!

Dalam Pilihan Raya Kecil Ayer Kuning, calon Barisan Nasional, Dr. Yusri Pakir menang dengan majoriti 5,006 undi. Beliau memperoleh 11,065 undi, mengalahkan calon Perikatan Nasional, Abdul Muhaimin Malek (6,059 undi) dan calon PSM, Bhavani (1,106 undi).

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *