பேராக்கில் 1,330 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!
- Sangeetha K Loganathan
- 17 Oct, 2024
அக்தோபர் 17,
பேராக்கில் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வரும்நிலையில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதைப் பேராக் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Saarani Mohamad உறுதிப்படுத்தினார்.
இன்றைய மாலை 5 மணி நிலவரப்படி 1,330 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேராக் வெள்ள நிவாரண ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திற்குப் பின் பல்வேறு நிவாரணப் பணிகளைக் கொண்டிருந்த நிலையில் வெள்ளத்தின் சீற்றம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
Sungai Bidor Hilir Perak, Sungai Rui Hulu Perak ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கிராமத் தலைவர்கள் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மாவட்ட அதிகாரிகள் அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், நதி, ஆறுகள், துணை நதிகள் மட்டுமின்றி, ஆற்றுக்கு அருகில் உள்ள வீடுகள், நகரம் , குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்கும்படி சிறப்புப் பணியாளர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Perak dijangka mengalami beberapa siri banjir hingga hujung tahun, mirip banjir 2014. Pegawai daerah dan penduduk berhampiran sungai dinasihatkan berwaspada. Mangsa banjir di Sungai Siput terus meningkat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *