அரசாங்கத்திலிருந்து டி.ஏ.பி வெளியேற வேண்டும்! பாஸ் வலியுறுத்து!

top-news

ஏப்ரல் 15,

டி.ஏ.பி கட்சி அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்து கொண்டு அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்படுவதற்குப் பதில் டி.ஏ.பி கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென பகாங் மாநிலப் பாஸ் கட்சியின் துணைத் தலைவரும் Beserah சட்டமன்ற உறுப்பினருமான Dato’ Andansura Rabu இன்று தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரவூப் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து டுரியான் மரங்களை நட்டு விவசாயம் செய்து வந்தவர்கள் மீது அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென Dato’ Andansura Rabu வலியுறுத்தினார். 

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாகவும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் ரவூப் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஏ.பி கட்சியைச் சேர்ந்த Chow Yu Hui அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுவது போல நாடகமாடுவதாகவும் Dato’ Andansura Rabu தெரிவித்தார். பகாங் மாநில அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் டி.ஏ.பி சட்டமன்ற உறுப்பினர்களும் மாநிலப் பதவிகளை விட்டு விலக வேண்டும் என பகாங் மாநிலப் பாஸ் கட்சியின் துணைத் தலைவரும் Beserah சட்டமன்ற உறுப்பினருமான Dato’ Andansura Rabu வலியுறுத்தினார்.

Dato’ Andansura Rabu menegaskan DAP perlu keluar dari kerajaan jika terus bertindak menentang tindakan pegawai kerajaan. Beliau mengkritik tindakan Ahli Parlimen Raub, Chow Yu Hui, yang didakwa menyokong penceroboh tanah hutan simpan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *