கண் திருஷ்டி விஷயத்தில், கவலைய விடுங்க!

top-news
FREE WEBSITE AD

கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது' என பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம்.காரணம், அவ்வளவு மோசமானது கண் திருஷ்டி. பொறாமை மற்றும் தீய நோக்கத்துடன் ஒருவரை பார்க்கும் போது அவர்களுக்கு பாதிப்பும், துரதிருஷ்டம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இதனால், உடல் வலி முதல் பல பிரச்சனைகள் ஏற்படுகிறன.

இந்த மாதிரியான சூழலில், உங்கள், குழந்தை வீடு, வியபாரம் என அனைத்திலும் இருக்கும் கண் திருஷ்டி, தீய சக்திகளை அடியோடு நீக்கவும் மற்றும் திரும்பவும் ஏற்படாமல் இருக்க இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்..

நெற்றியில் பொட்டு: வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, நெற்றியில் திருநீறு, மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்ற தெய்வீக சின்னங்களை அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இவற்றை நெற்றியில் வைத்துக்கொண்டு செல்லும் போது கண் திருஷ்டி ஏற்படாது. அதனால் தான், பெரியவர்கள் குங்குமம் வச்சுட்டு வெளியே செல்ல வேண்டும் என்பார்கள். 

கழுத்தில் ருத்ராட்சம், ஸ்படிகம் போன்ற இறை ஆற்றலை அதிகப்படுத்தக் கூடிய பொருட்கள் நம் உடலோடு ஒட்டி இருக்கும் போது, கண் திருஷ்டி ஏற்படாது. கால் அல்லது கைகளில் கருப்பு கயிறு கட்டுவதும் கண் திருஷ்டியை நீக்கும்.

குழந்தைக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க?:

குழந்தை பிறந்த 16வது நாள் முதல் குழந்தையின் கண்ணம் மற்றும் நெற்றியில் கருப்பு பொட்டு வைக்கலாம். அதுவும், ரசாயனம் அல்லதா கறிசிலாக்கண்ணி சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட மையை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.

இரவில் குழந்தையை தூங்க வைப்பதற்கு முன், குளிக்க வைக்கும் போதும் தண்ணீரை திருஷ்டி சுற்றி குளிக்க வைக்கலாம். இல்லையென்றால், ஒரு தட்டில் சிறிது குங்குமத்தை கரைத்து, இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு வெற்றிலையை கிள்ளி ஆலத்தி எடுத்து தூங்க வைக்கும் போது கண் திருஷ்டி நீங்கும். 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு உப்பு சுற்றி போடும்போது கண் திருஷ்டி கழியும்.

உப்பு வைத்து கண் திருஷ்டி கழிப்பது: இரண்டு உள்ளங்கையிலும் கல் உப்பை எடுத்து, தலை முதல் கால் வரை சுற்றி, தண்ணீர் நிரப்பி வைத்துள்ள வாளியில் போட்டு விட வேண்டும். தண்ணீரில் உப்பு கரைந்ததும் வீட்டிற்கு வெளியே ஊற்றிவிடவும். பெண்களுக்கு வெள்ளிக்கிழமையிலும், ஆண்களுக்கு சனிக்கிழமையிலும் இதை செய்தால் சிறந்ததாகும்.

மற்றொரு முறையும் உண்டு அது என்னவென்றால், நாம் குளிக்க எடுத்து வைத்துள்ள தண்ணீரில் உள்ளங்கை அளவு கல் உப்பை சேர்த்து கலந்து விடவும். உப்பு நன்றாக கரைந்ததும் அந்த நீரில் குளித்தால் கண் திருஷ்டி நீங்கும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

ஒரு அட்டை பெட்டியில் இரண்டு மூன்று காகிதங்களை வைத்து அதில், உப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் நம் வீட்டு வாசலில் இருந்து எடுக்கக்கூடிய மண் ஆகியவற்றை சேர்த்து, வீட்டில் உள்ளவர்களுக்கு அதை சுற்றி வாசலில் வைத்து அதை எரித்தால் திருஷ்டி கழியும். இதை வெள்ளிக்கிழமைகளில் செய்வது நல்லது. 

வீட்டிற்கு கண் திருஷ்டி படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?:அமாவாசை தினத்தில் பூசணிக்காய் உடைக்கலாம். இல்லையென்றால் வீட்டிற்குள் நுழைகின்ற இடத்தில் ஒரு நிலை கண்ணாடி அல்லது விநாயகரின் படத்தை வைக்கலாம். வீட்டிற்கு முன் திருஷ்டி பொம்மை அல்லது திருஷ்டி பூசணிக்காய் வைக்கலாம்.

வீட்டிற்கு நுழைகின்ற இடத்தில் ஒரு உருளியை தண்ணீர் மற்றும் பூக்களால் நிரப்பி, அதன் பக்கத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் உப்பு வைக்கலாம். இந்த உப்பிற்கு மேல், ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, ஒரு பாதியில் குங்குமமும், ஒரு பாதியில் மஞ்சளையும் வைக்க வேண்டும்.

வியாபாரத்தில் திருஷ்டி நீங்க?: உங்கள் கடைக்கு நுழையும் இடத்தில் பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை பழத்தை கோர்த்து தொங்க விடலாம். இல்லையென்றால், மக்களின் பார்வை அதிகம் படக்கூடிய இடத்தில், உதாரணத்திற்கு மேஜை போன்ற இடத்தில், ஒரு கண்ணாடி கிளாசில் தண்ணீர் நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை வைக்கலாம். தினசரி, இந்த தண்ணீரையும் பழத்தையும் மாற்ற வேண்டும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *