இந்தியப் பொதுப் பூப்பந்து இறுதி ஆட்டத்திற்கு தீனா-பெர்லி ஜோடி தகுதி இழப்பு!

top-news
FREE WEBSITE AD

புது டில்லி, ஜன. 19 -

புது டில்லியில் நடைபெற்று வரும் இந்தியப் பொதுப் பூப்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடிய மலேசியாவின் எம். தீனா-பெர்லி டான் ஜோடியினர், அதில் தோல்வியுற்றதால், இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெறுவதில் தோல்வியுற்றனர்.

இவர்களை தவிர்த்து, கலவை இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்றிருந்த மலேசியாவின் கோ சூன் ஹுவாட்-ஷெவோன் ஜெமி லாய் ஜோடியினரும் இறுதி ஆட்டத்திற்குத் தகுதியாவதில் தோல்வியுற்றனர்.

உலகப் பூப்பந்து தர வரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கும் தீனா-பெர்லி ஜோடியினர், நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில், தென் கொரியாவின் கிம் ஹை ஜியோங்-கோங் ஹீ யோங் ஜோடியினரிடம் 18-21 18-21 என்ற நிலையில் தோல்வியுற்றனர்.

மொத்தம் 53 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த இந்த ஆட்டத்தின்போது, தீனா-பெர்லி செய்த பல தவறுகளை தென் கொரியர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதிவேகத்தில் புள்ளிகளைச் சேகரித்தனர்.
அரையிறுதி வரையில் சென்றதற்காக தீனா- பேர்லி ஜோடியினர், 59 ஆயிரம் வெள்ளியைப் பரிசாகப் பெறவுள்ளனர்.

இந்நிலையில், ஆண்-பெண் கலவை இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில் விளையாடிய மலேசியாவின் கோ சூன் ஹுவாட்-ஷெவோன் ஜெமி லாய் ஜோடியினர், சீனாவின் ஜியாங் ஷென் பாங்-வேய் யா ஷின் ஜோடியினரிடம் 21-18, 19-21, 9-21 என்ற நிலையில் தோல்வியுற்றனர்.இந்த கணவன்-மனைவி ஜோடியினர், இதுவரையில் விளையாடி இருக்கும் ஆறு ஆட்டங்களில் அடைந்திருக்கும் ஐந்தாவது தோல்வியாக இது இருக்கிறது.

அரையிறுதி வரை சென்றதற்காக, கோ சூன் ஹுவாட்-ஷெவோன் ஜெமி லாய் ஜோடியினரும் 59 ஆயிரம் வெள்ளியைப் பரிசாகப் பெறவுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *