சுக்மாவில் பதக்கங்கள் வென்ற கெடா மாநில கராத்தே போட்டியாளர்களுக்கு வெகுமதி!

top-news
FREE WEBSITE AD

(கே. ஆர். மூர்த்தி)

அலோர்ஸ்டார், மார்ச் 29-

கெடா மாநில அரசாங்கம் சுக்மாவில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற கராத்தே போட்டியாளர்களுக்கு 6,600 வெள்ளி வெகுமதி வழங்கியது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சுக்கான் மலேசியா என்படும் சுக்மா 2024 கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கூச்சிங்கில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் பங்கு பெறும் போட்டியாளர்கள் பதக்கம் வென்றால் அவர்களுக்கு மாநில அரசாங்கத்தின் சார்பில் வெகுமதிகள் வழங்கப்படும் என்று சுக்மாவில் கலந்துகொள்பவர்களுக்கு மாநில கொடி வழங்கும் நிகழ்வில் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் அறிவிப்பு செய்தார்.

அதன்படியே கெடா மாநிலத்தை பிரதிநிதித்து பல போட்டியாளர்கள் களத்தில் இறங்கி தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று மாநிலத்திற்கும் மாநில இளைஞர் விளையாட்டு மன்றத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அந்த வகையில் கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் கோஷி மாஸ்டர் எஸ். ஸ்டாலின் மற்றும் மாநில கராத்தே கழகத்தின் தலைமை பயிற்றுனர் சுரேஸ் நடராஜன் தலைமையில் மாநிலத்தைச் சேர்ந்த 8 போட்டியாளர்கள் சுக்மாவில் கலந்து கொண்டார்கள்.

கெடா மாநில கராத்தே கழகம் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுக்கு குறி வைத்து சுக்மாவில் களம் இறங்கினார்கள். ஆனால் வெற்றி பெற்றதோ ஒரு தங்கம் 2 வெண்கல ப்பதக்கங்கள் மட்டுமே.

இம்மாநில கராத்தே கழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் வேலு தங்கப்பதக்கம் வென்றார் அவருக்கு வெகுமதியாக மூவாயிரம் வெள்ளி வழங்கப்பட்டது. மோனிஷா மற்றும் ஹேரிக் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். ஒருவருக்கு தலா ஆயிரம் வெள்ளி வீதம் இரண்டாயிரம் வெள்ளி வெகுமதி வழங்கப்பட்டது.அதோடு மாநில கராத்தே கழகத்தின் தலைமை பயிற்றுனர் சுரேஸ்குமார் நடராஜனுக்கு ஆயிரத்து 600 வெள்ளி வெகுமதி வழங்கப்பட்டது.

அலோர்ஸ்டார், அனாக் புக்கிட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மெந்தாலும் மண்டபத்தில் நடைபெற்ற இந்த வெகுமதி வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் போட்டியாளர்களுக்கு வெகுமதிகளை எடுத்து வழங்கினார்.

கெடா மாநில கராத்தே குழுவிற்கு தலைமை நிர்வாகியாக கோஷி மாஸ்டர் எஸ். ஸ்டாலின் துணைப்பயிற்றுனர்களாக மாஸ்டர் கோமகன் சோனி ராஜா தோமஸ் மற்றும் மாஸ்டர் மாதுரி புவனேசன் ஆகிய மூவரும் சிறப்பான முறையில் இக்குழுவினரை வழிநடத்திச் சென்றார்கள்.

Kerajaan Kedah memberi RM6,600 kepada atlet karate yang memenangi pingat di SUKMA 2024. Krishnan Velu mendapat RM3,000 untuk emas, Monisha dan Harick menerima RM1,000 setiap seorang untuk gangsa, manakala jurulatih Suresh Kumar mendapat RM1,600. Hadiah disampaikan oleh Menteri Besar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *