மாமன்னர் குடும்பத்தின் மதிப்புமிகு இந்தியர்கள்! அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்! - பேரரசியார் நெகிழ்ச்சிப் பதிவு

- Shan Siva
- 26 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 26: மலேசியர்கள் தேசிய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பேரரசியார் ராஜா ஜரித் சோபியா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தனது
குடும்பத்தை கவனித்துக்கொண்ட நான்கு மலேசிய இந்தியர்களின் பங்கை அவர்
எடுத்துரைத்துள்ளார்.
தனக்கும் தனது
கணவர் மாமன்னர் சசுல்தான் இப்ராஹிமுக்கும் பிற இனப் பின்னணியைச் சேர்ந்த பல
நண்பர்கள் இருந்தாலும், நான்கு இந்தியர்கள் மிகவும்
குறிப்பிடப்பட வேண்டியவர்கள் என்று அவர் கூறினார்.
அவர்களுக்கு என் குடும்பத்தினரிடமிருந்து ஆயிரம் நன்றிகள்
என்று பேரரசியார் அரச தம்பதியினரின் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் இருவர்
குடும்ப மருத்துவர்களான சுப்பிரமணியம் பாலன் மற்றும் சிங்காரவேலு என்றும், மேலும் ஜோகூரின் முன்னாள் உதவியாளர் சுகுமாறன் மற்றும் அரண்மனை
அதிகாரி மோகன் எனவும் அவர் பெயர் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு
சுபாங் ஜெயாவில் உள்ள இந்தியக் கோயில் வளாகத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் அங்கு
ஏற்பட்ட இனப் பதற்றம் குறித்து தனது குடும்பத்தினரின் துயரத்தை ராணி மேற்கொள் காட்டினார்.
இந்த சம்பவத்தின்
விளைவாக ஏற்பட்ட இன சகிப்பின்மை மற்றும் தவறான புரிதல், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது இளைய மகன் துங்கு அப்துல்
ஜலிலின் மரணம் குறித்து தனது குடும்பத்தினரின் துயரத்தை மேலும் அதிகரித்ததாக அவர்
எழுதினார்.
சுப்பிரமணியம்
மற்றும் சிங்காரவேலு ஆகியோர் புற்றுநோய்க்கான சிகிச்சையின் போது ஜலிலைக்
கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவில் ஒரு பகுதியாக இருந்ததாகவும். தனது கணவர் மற்றும் அவரது மற்ற பிள்ளைகளுக்கும்
எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளித்ததாகவும் அவர் கூறினார்.
மோகன் அன்புடன்
நினைவுகூரப்படும் ஒரு நபர். அவர் தனது அனைத்து குழந்தைகளுக்கும் நீச்சல்
கற்றுக் கொடுத்ததாகவும், மேலும் அவர்கள்
நீந்தும்போது மணிக்கணக்கில் அவர்களை கவனித்துக்கொள்வார் என்றும் அவர் கூறினார்.
மற்ற ஊழியர்கள் வேலைக்கு வரும் வரை அவர் தூங்கமாட்டார். எங்களை மிகுந்த பாதுகாப்புடன் கவனிப்பார் என்று அவர் தெரிவித்தார். எங்கள் வாழ்க்கையை அவரிடம் நம்பி ஒப்படைத்தோம்.
உலகெங்கிலும்
உள்ள பல வறிய இடங்கள் ஆயிரக்கணக்கானோரை அழிப்பதும், ஆயுத மோதலை
எதிர்கொண்டும் வரும் நிலையில், நமது நாட்டில் அனுபவிக்கப்படும் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு அனைத்து மலேசியர்களும்
நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Permaisuri Raja Zarith Sofia menegaskan kepentingan perpaduan nasional dan tidak mengambil mudah keharmonian kaum. Baginda menghargai sumbangan empat rakyat India yang menjaga keluarganya, termasuk doktor dan pegawai istana. Baginda juga mengingatkan rakyat bersyukur atas keamanan negara serta menanam kasih sayang antara kaum.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *